நடிகர் ராமராஜன் மகளா இது..? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

எண்பதுகளில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருக்கு போட்டியாக முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் அறிமுகமான படத்தில் இருந்து தற்போது வரை நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்.

துணை கதாபாத்திரங்கள், வில்லத்தனமான கதாபாத்திரங்கள், காமெடி கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எதிலும் நடிக்க மாட்டேன் என்ற ஒரு விடாப்பிடியான கொள்கையுடன் பயணித்து வருகிறார்.

இவருக்கு பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கூட அதனை ஏற்காமல் தவிர்த்து விட்டார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் இல்லையென்றால் நடிக்கவே மாட்டேன் என்பது இவருடைய கொள்கையாக இருக்கிறது.

அந்த அளவுக்கு உச்சத்தில் இருந்தவர் நடிகர் ராமராஜன். இன்றளவும் ராமராஜன் என்ற ஒரு பெயருக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களும் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.

ஜிகுஜிகுவென சட்டையை யாராவது போட்டுக் கொண்டிருந்தால் போதும்.. உடனே ராமராஜன் ரசிகனா நீயி.. என்று டக்கென பேச்சுவாக்கில் பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட ராமராஜன் பரவி கிடக்கிறார்.

கடந்த 1982ஆம் ஆண்டு நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ராமராஜன். தன்னுடைய திருமண வாழ்க்கையை கடந்த 2000 ஆம் ஆண்டு முறித்துக்கொண்டார். விவாகரத்துக்குப் பிறகு மனமுடைந்து போன நடிகை நளினி சிறிது காலம் ஓய்வில் இருந்து விட்டு அதன் பிறகு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சில திரைப்படங்களில் காமெடி நடிகையாக கூட நடித்திருக்கிறார். தனது குழந்தைகளான அருண் மற்றும் அருணா ஆகியோர் சிறுவயதில் இருக்கும் போதே ராமராஜன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இவருடைய மகள் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சுப்பிரமணியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அருணா. இவருடைய திருமணத்தில் ராமராஜன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் இருவருமே கலந்து கொண்டனர்.

இது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. விவாகரத்து ஆகி விட்டாலும் கூட தங்களது குழந்தைகளை அப்படியே விட்டு விடாமல் அவருடைய திருமணத்தை எடுத்து நடத்தி முடித்து அதை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இந்நிலையில் அருணா சுப்பிரமணியனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் ராமராஜனின் மகளா இது…? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

சமீபத்தில் தனது அப்பா ராமராஜன் குறித்து அருணா சுப்ரமணியன் பதிவுசெய்த ஒரு பதிவில் என் அப்பா மீது எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கிறது. அதே போல என் மீதும் அவருக்கும் அளவு கடந்த அன்பு இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி என் அம்மா மீது அப்பாவுக்கு ஒரு வெறித்தனமான அன்பு இருந்தது. இதனை நான் பல இடங்களில் உணர்ந்து இருக்கிறேன். இந்த அன்பு வெறுப்பாக மாறி விடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இருவரும் பரஸ்பரம் பிரிந்து விட்டார்கள் போல.

அடிக்கடி நான் அவரை சந்திக்க செல்வதுண்டு. அப்படி சந்திக்க செல்லும் போதெல்லாம் ..அம்மா எப்படி இருக்கிறார்..? அவர் உடல்நலத்துடன் இருக்கிறாரா..? என்று தான் முதலில் கேட்பார்.

இதை வெளியே சொன்னால் நம்ப கூட மாட்டார்கள். நான் ஏதோ நடிக்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால், அதுதான் உண்மை. அவர்கள் பிரிந்தது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை.. தனிப்பட்ட முடிவு. அதில் நாம் கருத்து கூறவோ அல்லது அது குறித்து விவாதம் செய்யவோ நமக்கு தகுதியோ அல்லது தேவையோ கிடையாது.

ஆனால் அவருடைய அன்பும் எங்களுக்கு கிடைக்கிறது. அம்மா அப்பா பிரிந்து விட்டார்கள் என்ற ஒரு குறையைத் தவிர வேற எதுவும் எங்களுக்கு இல்லை என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் அருணா சுப்பிரமணியம். இந்நிலையில் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam