1989 இல் வெளிவந்த கரகாட்டம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை தந்தவர் நடிகர் ராமராஜன். இந்த படமானது தொடர்ந்து 400 நாட்கள் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஓடியதால் வசூலில் மிகப்பெரிய சாதனையை புரிந்தது.
இவர் திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.மேலும் 1998ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 12 வது மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 2001 ஆம் ஆண்டு சீறிவரும் காளை என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு 2012ல் இவர் மேதை எனும் படத்தில் நடித்து முடித்த பின் திரைத்துறைக்கு ஒரு மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
தற்போது மீண்டும் இவர் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளா.ர் இவர் ரீ என்ட்ரி கொடுக்கக்கூடிய படத்தின் பெயர் தான் சாமானியன். இந்த படமானது இவருக்கு 45 வது படமாக இருக்கும் இது சம்பந்தமாக அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துவிட்டது.
ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளிவந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் உருவாகக்கூடிய இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர் நடிக்கிறார்கள். ராகேஷ் இப்படத்தினை இயக்க உள்ளார்.மேலும் மதியழகன் என்ற படத்தை தயாரிக்கிறார். இதனையடுத்து தீபாவளி அன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் கையில் துப்பாக்கியோடு ராமராஜன் நின்று இருக்கக் கூடிய நிலையில் போஸ்டர் வெளிவந்துள்ளது மிக கம்பீரமான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டரை பார்த்து அனைவரும் வியந்து இருக்கிறார்கள்.
மேலும் பால் கறக்க சொம்பை ஏந்திய கையில் இன்று துப்பாக்கியா என்ற கேள்வியை கேட்டு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தின் கதையம்சம் எப்படியிருக்கும் எல்லோர் கையிலும் துப்பாக்கி வைத்து உள்ளதால் இது ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்குமா என்பது போன்ற கோணத்தில் யோசித்து வருகிறார்கள்.
சாமானியன் என்ற பெயரே வித்தியாசமாக இருக்கும் போது நிச்சயமாக இந்த திரைப்படத்தில் ராமராஜ் என்னதான் அப்படி சாதித்துள்ளார் என்பதை விரைவில் வெளிவரும்.