தெலுங்கு சினிமா உலகை கலக்கி வந்த நடிகை ரம்பா தமிழில் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.
இந்த படத்தில் இடம்பெற்ற அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா என்ற பாடல் இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒன்று ஆண்டுகள் பல ஆனாலும் அந்தப் பாடலின் இளமை மற்றும் அந்தப் பாடலின் இசை இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரம்பா தொடை அழகி என்று பலராலும் அறியப்பட்டார். தொடை என்றாலே ரம்பா தான் என்று கூறுவார்கள். இன்றும்கூட இளம் நடிகைகள் தொடையை காட்டி போட்டோஷுட்ட நடத்தும்போது ரம்பாவுக்கு போட்டியாக வருவீர்கள் போல தெரிகிறதே என்று நடிகை ரம்பா-வை நினைவூட்டியே தொடர்ந்து வருகிறார்கள்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்திருக்கிறார் நடிகை ரம்பா. நவரச நாயகன் கார்த்திக், நடிகர் பிரபு, ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ரம்பா பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இறுதியாக தமிழில் பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் காவியா என்ற ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் மலையாளம் தெலுங்கு பெங்காலி ஆங்கில படத்தில் கூட நடித்து இருக்கிறார் நடிகை ரம்பா.
இதற்கிடையே கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் கனடாவில் வசித்து வருகிறார். இடையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னைக்கு திரும்பி விட்ட நடிகை ரம்பா அவருடைய குடும்பத்தினர் எடுத்த தீவிர முயற்சியின் பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. தற்போது இணையத்தில் ஆக்டிவாக வந்து பணம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
தன்னுடைய சக சினிமா தோழிகளை சந்தித்து தன்னுடைய பொழுதை மகிழ்ச்சியாக போதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் தன்னுடைய தொடர்ந்து எடுப்பாக தெரிய எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தொடையழகின்னு சும்மாவா சொன்னாங்க.. என்று புலம்பி வருகிறார்கள்.