தமிழ் சினிமாவை பொருத்தவரை 90களில் மிகச் சிறந்த நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் இளைஞர்களின் மனதில் இருந்தவர் நடிகை ரம்பா.
இவர் தொடை அழகு பாட்டை ரசிகர்கள் பலர் மயங்கி விட்டார்கள் என்று கூறலாம் அந்த அளவு ரசிகர்களின் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருந்தவர்தான் இவர்.
உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு இணைந்து இவர் நடித்திருந்த விதம் இவரது கிளாமரை இன்றைய தலைமுறையும் அந்த படத்தை பார்த்தால் நிச்சயம் திரும்பிப் பார்ப்பார்கள். அந்த அளவு விரசம் இல்லாத கவர்ச்சியால் இவர் ரசிகர்களை கட்டி போட்டு இருந்தார்.
தற்போது கனடாவில் செட்டிலாகி தனது வாழ்க்கையை வாழ்ந்து வரும் அவர் தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் வேளையில் கார் விபத்துக்கு உள்ளாகி விட்டது.
இந்த விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேலும் கார் சிக்கிய விபத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்பதை அவர் புகைப்படங்களின் மூலம் தற்போது twitter-ல் பகிர்ந்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது ஒரு சந்திப்பில் தங்களது காரை மற்றொரு மோதி தள்ளியது என்று கூறி இருக்கிறார்.
இந்த விபத்தில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் செவிலி தாய் ஆகியோருக்கு மிக லேசான காயம் ஏற்பட்டுள்ளதாம். எனினும் தற்போது இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் இவரது குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக இவர் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து நடிகை ரம்பா மோசமான நாட்கள், மோசமான நேரம் எனவே நீங்கள் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து மிக விரைவில் மீண்டு வர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.