உதயநிதி சொல்றத நம்பாதிங்க.. சொல்றது ஒன்னு.. செய்றது ஒன்னு.. வெடித்து சிதறிய ரமேஷ் கண்ணா..!

திரை உலகில் நடிக்கும் நடிகர்கள் பலரும் அரசியலில் களம் கண்டு ஒரு சிலர் முதல்வர் நாற்காலியை பிடித்து அரசாட்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திமுகவின் வாரிசு உதயநிதி விரைவில் துணை முதல்வராக இருக்கிறார் என்ற செய்திகள் பல்வேறு வகைகளில் கசிந்து வருகிறது.

இவரைப் பற்றி இயக்குனர் ரமேஷ் கண்ணா, உதயநிதி சொல்லறத நம்பாதீங்க.. சொல்லறது ஒன்னு.. செய்யறது ஒன்னு.. என்ற ரீதியில் சில விஷயங்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்..

அந்த வகையில் உதயநிதி ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் தற்போது திமுகவின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கிறார்.

இவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மகன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கூறிய நிலையில் 2019 திமுக இளைஞரணி செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

இதனை அடுத்து தற்போது இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா இவர் பற்றி சில விஷயங்களை அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

இயக்குனர் ரமேஷ் கண்ணா..

அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா பேசும் போது உதயநிதியை யாருமே நம்ப வேண்டாம் என்றும் அவர் சொல்வதை எப்போதும் செய்வதில்லை என்ற கருத்தையும் முன்வைத்து இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம் என்று பார்க்கையில் 2009 ஆம் ஆண்டு ஆதவன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி சிறப்பு தோற்றத்தை செய்திருந்த சமயத்தில் தொடர்ந்து நீங்கள் திரைப்படங்களில் நடிப்பீர்களா? என்று உதயநிதியிடம் ரமேஷ் கண்ணா கேட்ட போது நோ நோ இதெல்லாம் யாரு செய்ய போறாங்க என்று கூறியதாக கூறியுள்ள ரமேஷ் கண்ணா இதை அடுத்து 2012 ஆம் ஆண்டு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதனை அடுத்து 2014 இல் கதிர்வேலன் காதல் என்ற திரைப்படத்திலும், 2015 இல் நண்பேன்டா படத்திலும், 2016 ல் கெத்து திரைப்படத்திலும், 2017ல் சரவணன் இருக்க பயமேன் என்ற திரைப்படத்திலும் தொடர்ந்து நடித்து வரும் உதயநிதி வருடத்திற்கு ஒரு படமோ அல்லது இரண்டு படம் என்ற ரீதியில் 2022 ஆம் ஆண்டு நெஞ்சுக்கு நீதி மற்றும் மாமன்னன் படம் வரை நடித்து விட்டார்.

மேலும் அரசியல் பிரவேசம் பற்றி கேட்ட போது அரசியலுக்கு எல்லாம் வருவதாக எண்ணமே இல்லை என்று கூறிய இவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று போல் அரசியலில் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு முழு கவனத்தை செலுத்தி தற்போது துணை முதல்வர் அந்தஸ்தை பெறக் கூடிய வகையில் உயர்ந்து நிற்கிறார்.

எனவே தான் யாரும் உதயநிதியை நம்ப வேண்டாம் என்ற ரீதியில் தான் பேசியதாகவும் கூறி இருக்கும் ரமேஷ் கண்ணா வின் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் சென்று நீங்கள் பார்க்கலாம் https://www.youtube.com/shorts/e-xVgwz80U4

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version