விஜய் இப்படி பண்ணுவாருன்னு எதிர்பாக்கல.. நான் போலீஸ்கிட்ட மாட்டிகிட்டேன்.. ரமேஷ் கண்ணா பேச்சு..!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பெரும் புகழ்பெற்றவர் தான் நடிகர் ரமேஷ் கண்ணா .

இவர் திரைப்பட நடிகர்,வசன எழுத்தாளர்,இயக்குனர் இப்படி பன்முகத் திறமைகளை கொண்டு சிறந்தவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா:

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். முக்கியமாக இவரது நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவையாக பார்க்கப்பட்டு வருகிறது.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நாடகக் காவலரான ஆர் எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறுவயதில் இருந்து நடித்து வந்தார்.

அதன் மூலம் நடிப்பு கற்றுக் கொண்டார் அதன் பிறகு இவர் துணை இயக்குனராக காரைக்குடி நாராயணன் பாண்டியராஜன், கோடி ரமேஷ் கண்ணா , விக்ரமன் மற்றும் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவருடன் துணை இயக்குனராகப் பணியாற்றி திரைப்படம் இயக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார்.

ரமேஷ் கண்ணாவின் திரைப்படங்கள்:

இவர் விக்ரமணியிடம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக திரை துறையில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது .

அதுதான் அவர் நடித்த முதல் திரைப்படம் கூட அதையடுத்து உன்னை நினைத்து , பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன், வரலாறு, ஆதவன் இப்படி பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதில் அழுத்தமாக பதியும்படியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக விஜய்யுடன் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்த ரமேஷ் கண்ணா இன்று வரை மக்களின் பேவரைட்டான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

அந்த படத்தில் இவரது காட்சியும் நடிப்பும் ஏகோபித்த வரவேற்பை பெற்று ரசிகர்களின் மனம் கவர்ந்த காட்சியாகவும் பார்க்கப்பட்டது .

ரமேஷ் கண்ணாவின் மகன்:

ரமேஷ் கண்ணாவுக்கு ஷோபா என்ற ஒரு மனைவி இருக்கிறார் .இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இதில் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த். துணை இயக்குனராக முருகதாஸ் இலக்கிய ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் ஏ ஆர் முருகதாஸிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார் திரைப்படத்திலும் இவர் துணை இயக்குனராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜஸ்வந்த் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக தனியார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது .

இந்த திருமணத்தில் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து சென்றது இணையத்தில் மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு அந்த வீடியோ கூட வைரலாகி இருந்தது .

மகனின் திருமணத்தில் விஜய்:

இந்நிலையில் மகனின் திருமணத்தை குறித்து பேசியுள்ளார் ரமேஷ் கண்ணா, சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரமேஷ் கண்ணாவிடம் நீங்கள் விஜய் உடன் நடித்தது ஒரு படம் தான் என்றாலும் அந்த படம் காலம் காலமாக பேசும் படமாக அமைந்துவிட்டது எனக் கூற… உடனடியாக ரமேஷ் கண்ணா அதனால்தான் என்னுடைய மகனுடைய திருமணத்திற்கு கூப்பிட்ட உடனே விஜய் வந்து விட்டார் என பெருமையோடு கூறினார்.

மேலும் மகனின் திருமணத்தை பற்றி பேசிய ரமேஷ் கண்ணா நான் பத்திரிக்கை வைக்க போகும் போதே அவர் வருவாரோ வரமாட்டாரோ என்ற ஒரு சந்தேகத்தால் சென்றேன்.

ஆனால், என் மனைவியை கூட்டிக்கொண்டு சென்று பத்திரிகை வைத்துவிட்டு அவர் வரும்படி அழைப்பு விடுத்து விட்டு நான் வீட்டுக்கு வந்து விட்டேன் .

அவர் முதல் ஆளாக எங்களுடைய மகனின் திருமணத்திற்கு காலை 6:00 மணிக்கு வந்து விட்டார் .அவர் ஒரு பெரிய ஹீரோ அவர் வர வேண்டும் என்று அவசியம் இல்லை .

எங்களுடைய குடும்பமும் மிக சிறியது இந்த திருமணத்திற்கு வந்து செல்ல வேண்டும் எந்த ஒரு எந்த ஒரு அவசியமும் இல்லை .

கூட்டத்திற்கு நடுவில் விஜய்

ஆனால் அவர் வந்த உடனே எங்களுடைய அந்த திருமணத்தில் ஏகப்பட்ட கூட்டம் அதிகரித்து விட்டார்கள். அவரை பாதுகாப்பாக பிடித்து கொண்டு வந்து வெளியில் கொண்டு வந்து விடுவதற்குள் எனக்கு உயிரே போய்விட்டது.

அவர் கார் எடுத்துக்கொண்டு சென்ற உடனே போலீஸ் திருமணத்தை மண்டபத்தை நோக்கி படையெடுத்து விட்டனர்.

உடனே யாருடைய கல்யாணம் இது?என்ன இவ்வளவு கூட்டம் என்று போலீசார் அதட்டி கேட்டுக்கொண்டே வந்தாங்க… என்னை பார்த்த உடனே சார் உங்களுடைய கல்யாணம் என்றால் முன்னாடியே சொல்லி இருக்க கூடாதா?

ரோடு முழுக்க டிராபிக் ஆகிவிட்டது என கூறினார்கள். உடனே முன்பாக அறிவிக்காதது ஏன் என்ற போலீசார் எங்களை திட்டி விட்டு சென்றார்கள் .

இப்படியாக விஜய்யின் விஜய்யின் வருகை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுத்தது என நடிகர் ரமேஷ் கண்ணா அந்த பேட்டியில் மிகுந்த பெருமையோடு பேசி இருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam