DDயை காதலித்த பிரபலம்..! செட்டுக்குள் காதலை சொல்ல சென்ற போது தெரிந்த அதிர்ச்சி உண்மை..!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்த டிடி என்கிற திவ்யதர்ஷினியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவு மக்களின் மத்தியில் பிரபலமான நபர்களில் ஒருவராக இவர் விளங்கினார்.

ஒரு திரைப்பட நட்சத்திரத்திற்கு எந்த அளவு அந்தஸ்து இருக்குமோ? அதே அளவு அந்தஸ்தோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.

டிடியை காதலித்த பிரபலம்..

டிடி என்கிற திவ்யதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளனியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் இவர் தொகுப்பாளினியாக இருந்த காலத்தில் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

எனினும் இவரது மண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் படு பிஸியாக டிடி இருந்தார்.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடியை ஒருதலையாக காதலித்த நபர் ஒருவர்  அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்த விஷயத்தை விரிவாக கூறியிருக்கிறார். அது பற்றி இனி பார்க்கலாம்.

செட்டுக்குள் காதலை சொல்ல சென்ற போது..

அப்படி யார் டிடியை மனம் உருகி காதலித்தார்கள் என்பது போன்ற எண்ண அலைகள் உங்களுக்குள் ஏற்படுவது உண்மை தான் எனினும் உங்களது யூகத்திற்கு சற்று முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

அந்த நபரும் ஒரு பிரபல தொகுப்பாளர் என்பது நாங்கள் கொடுக்கும் குலு இதை வைத்து உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? என்று பாருங்கள். அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். அந்த தொகுப்பாளர் வேறு யாருமில்லை ரமேஷ் நல்லாயன்.

இவர்தான் அண்மை பேட்டி ஒன்றில் இந்த விஷயத்தை பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

தெரிந்து போன அதிர்ச்சி உண்மை..

ஆரம்ப காலத்தில் ரமேஷ் நல்லாயன் தொகுப்பாளராக இருந்த போது டிடியை மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார் என்றும் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து அந்த இன்ஸ்பிரேஷன் நாளடைவில் கிரஷ் ஆக மாறியது. எனவே என் காதலை சொல்ல வேண்டும் என்ற ஆசையில் செட்டுக்குள் நுழைந்த போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இதனை அடுத்து அந்த செட்டில் டிடி-யின் நிச்சயதார்த்தம் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். இதனை அடுத்து எனது மனதுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தி தந்ததோடு கடைசி வரை இந்த காதல் விஷயத்தை அவரிடம் சொல்லாமலேயே இருந்து விட்டேன்.

இதனை அடுத்து ஒரு நல்ல பெண்ணை மிஸ் செய்து விட்டோம் என்ற மனவேதனை என்னுள் இருந்ததை என்பதை ரமேஷ் நல்லயன் ஓப்பன் ஆகக் கூறி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version