Site icon Tamizhakam

என் லைஃப்ல டிடி-ய மிஸ் பண்ணிட்டேன்..!! உண்மையை உளறிய வி ஜே ரமேஷ் நல்லாயன்..

தமிழ் திரை உலகில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்திரையில் பணி புரியும் தொகுப்பாளினிகளும் அவர்களுக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்றிருக்கிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாலினியாக விளங்கிய திவ்யதர்ஷினி என்கிற டிடி அக்கா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. திரைப்பட நடிகைகளுக்கு ஒரு ரசிகர் வட்டாரம் இருப்பது போலவே இவருக்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் படை உள்ளது.

என் லைஃப்ல டிடி-ய மிஸ் பண்ணிட்டேன்..

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளனிகளில் ஒருவராக திகழ்ந்த திவ்யதர்ஷினி காபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதை அடுத்து யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வதைப் போல இவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக விஜய் டிவியில் தற்போது எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை.

மேலும் பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகளுக்கு இன்ஸ்பிரேசனாக இருக்கக்கூடிய இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எனினும் என்ன சொல்ல.. பிரபலங்களின் வாழ்க்கையில் நடக்கும் அதே விஷயம் தான் இவரது வாழ்க்கையிலும் நடந்தது.

சில ஆண்டுகளிலேயே இவர்கள் திருமண வாழ்க்கை முற்றுப்பெற்று விவாகரத்தில் முடிந்தது. அதனை அடுத்து பட்ட காலில் படும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் காலில் ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து டிடி சின்னத்திரையில் இருந்து விலக ஆரம்பித்தார்.

திவ்யதர்ஷினியை பொறுத்த வரை சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தொகுப்பாளர் ஒருவர் தற்போது டிடி தனக்கு ஒரு காலத்தில் கிரஷ் ஆக இருந்திருக்கிறார் என்று ஓபனாக பேசிய விஷயம் இணையங்களில் வைரலாக மாறியுள்ளது.

உண்மையை உளறிய விஜே ரமேஷ் நல்லாயன்..

விஜே ரமேஷ் நல்லாயன் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய சமயத்தில் பெப்சி உமா, சிவக்கார்த்திகேயன், டிடி போன்றவர்கள் தான் இவருக்கு ஆரம்பத்தில் இன்ஸ்பிரேஷனாக இருந்தார்கள் என்ற தகவலையும் கூடுதலாக தந்திருக்கிறார்.

அத்தோடு டிடிக்கும் அவருக்கும் ஒரு மிகச்சிறந்த நட்பு இருந்ததாகவும் டிடி என்றாலே தனக்கு அந்த அளவு பிடிக்கும் என்று சொல்லி இவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது நாள் செல்ல, செல்ல அவர் மீது ஒரு கிரஷ் ஆக உருவெடுத்தது.

இதைப் பற்றி நான் டிடி இடம் காதலை கூற ஆசைப்பட்டதோடு அதை கூறுவதற்கு என் பயம் தடை செய்தது. ஒரு சமயம் அதை கூறினால் எப்படி எக்ஸ்ப்ரஸ் செய்வாரோ? என்ற எண்ணத்தில் நான் சொல்லாமல் அப்படியே மனதுக்குள் வைத்துக் கொண்டேன்.

 

இதனை அடுத்து ஜோடி செட்டுக்கு சென்ற போது என் காதல் விஷயத்தை கட்டாயம் சொல்லி விட வேண்டும் என்று உறுதியோடு சென்று சமயத்தில் அங்கு அவரது நிச்சயதார்த்தம் குறித்து பேச்சுக்கள் அடிபட்டதை அடுத்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அத்தோடு கடைசி வரை என்னுடைய காதலை நான் சொல்லவே இல்லை. ஒரு நல்ல பெண்ணை மிஸ் பண்ணி விட்டோம் என்ற கஷ்டம் என் மனதுக்குள் இருந்தது என்று விஜே ரமேஷ் நல்லாயன் கூறிய விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version