இழுத்து சுவற்றில் வைத்து அழுத்தினார்.. கால் உதறல் எடுத்துடுச்சு.. பிரபல நடிகர் குறித்து ரம்யா கிருஷ்ணன்..!

தென்னிந்திய திரை உலகையே கலக்கு கலக்கிய நடிகைகளின் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்தவர்.

இவர் முறைப்படி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக்கலையை கற்றுக் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட இயக்குனர் கிருஷ்ண வம்சையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 14 வது வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதனை அடுத்து 1985 இல் வெளி வந்த வெள்ளை மனசு என்ற படத்தில் முதன் முதலாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவர் 1985-இல் படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடனும் பேர் சொல்லும் பிள்ளை என்ற படத்தில் 1987-ல் கமலஹாசன் உடன் துணை வேடங்களில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, நாகேஸ்வரி, பஞ்சதந்திரம், ஜூலி கணபதி போன்ற படங்களில் இவரது நடிப்புத் திறன் வெகுவாக ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து படையப்பாவில் நீலாம்பாரியாக நடித்த கேரக்டரையும், பாகுபலியில் ராஜமாதாவாக நடித்ததை திரை உலகம் உள்ள வரை மறக்க முடியாது.

இந்நிலையில் தற்போது 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பஞ்சதந்திரம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி தற்போது பகிர்ந்திருக்கிறார். இந்த அனுபவங்களை கேட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

கால் உதறல் எடுத்துச்சு..

என்றுமே எவர்கிரீன் நடிகையாக திகழும் இவர் அம்மன் ரோலாக இருந்தாலும் சரி, கவர்ச்சி ரோலாக இருந்தாலும் சரி தன்னுடைய கதாபாத்திரங்களை மிக நேர்த்தியான முறையில் நடித்து பாராட்டுகளை பெற்று விடுவார்.

அப்படிப்பட்ட ரம்யா கிருஷ்ணன் கமலஹாசனோடு பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட இடியாப்ப சிக்கலை விளக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் விலை மாது கதாபாத்திரத்தில் மேகி என்ற பெயரில் நடித்திருப்பார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது வசனமும் பேசிக்கொண்டு கமலஹாசனை நகர்த்தி சமாளிக்க கூடிய ஒரு சீனை எடுக்க வேண்டி இருந்தது.

அந்த சீனில் கமலஹாசன் என்னை சுவற்றில் வைத்து அழுத்தி செய்ய வேண்டிய செயல்களை பக்காவாக செய்து முடித்து விடுவார், ஆனால் எனக்கு கால் உதறல் எடுத்து விட்டது. கமலஹாசன் எவ்வளவு பெரிய லெஜன்ட் அவரிடம் எப்படி இந்த சீனில் நடிப்பது என்று தெரியாமல் திணறியபடி தான் அந்த சீனை நடித்து முடித்தேன்.

இப்படித்தான் தான் அந்த சீனில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்ததை பகிர்ந்து இருக்கக்கூடிய ரம்யா கிருஷ்ணனின் பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

மேலும் அது போன்ற சீனில் இவரை போன்ற நடிகையே நடிக்க திணறி இருக்கிறார் என்றால் வேறு நடிகைகளின் நிலையை நினைத்துப் பார்த்த ரசிகர்கள் நிச்சயமாக அந்த மேகி கேரக்டரில் யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என கூறி இருக்கிறார்கள்.

இன்று வரை திரை உலகில் நிலைத்திருந்து இருப்பதோடு பல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் வெப் சீரியல்களிலும் நடித்து அசத்தி வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இப்படி ஒரு நிகழ்வு ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்ததா? என்று ஆச்சரியத்தோடு ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version