பிரபல நடிகருக்கு மகள், தங்கை, மனைவியாக நடித்த ஒரே நடிகை..!

எண்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இன்றும் எவர்கீரின் நடிகையாக பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை நடிகை ரம்யா கிருஷ்ணன் உருவாக்கி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ரம்யா கிருஷ்ணனை பொறுத்த வரை எத்தகைய கேரக்டராக இருந்தாலும் எளிதில் அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டுவதில் வல்லவர். அது அம்மன் வேடமாக இருந்தாலும் சரி அரைகுறை மேகியாக நடித்தாலும் சரி இவரது நடிப்பு பாராட்டும் படி தான் இருக்கும்.

படையப்பாவில் நீலாம்பரியாக, பாகுபலி ராஜமாதாவாக அம்மன் திரைப்படத்தில் தெய்வமாக இப்படி பல்வேறு கெட்டப்புகளில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் தேவைப்பட்டால் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்த கூடிய அற்புதமான நடிகை.

திரை உலகிற்கு நடிக்க வந்தோம் சென்றோம் என்று பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் விடக் கூடிய காலகட்டத்தில் கூட சினிமா மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் படு பிஸியாக நடிக்க கூடிய நடிகையாக இன்றும் வலம் வருகிறார்.

அது மட்டுமில்லாமல் தொலைக்காட்சிகளில் நடக்கும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் இவர் நேற்று இவரது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். 54 வயதை கடந்து விட்ட நிலையிலும் இன்னும் அதே துள்ளல் நடிப்பில் அனைவரையும் கவரும் நடிகை என்றால் மிகையாகாது.

பிரபல நடிகருக்கு மகள் தங்கை மனைவியாய்..

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் பிரபல நடிகர் ஒருவருக்கு மகளாக, தங்கையாக மனைவியாக நடித்திருக்கிறார் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற வாய்ப்பு எந்த ஒரு நடிகைக்கும் கிடைத்திருக்காது என்று சொல்லலாம். அந்த வகையில் இவர் பிரபல நடிகரான நாசரோடு இணைந்து மனைவியாக பாகுபலி படத்தில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து நடிகர் நாசரோடு இணைந்து வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் மகளாக நடித்திருப்பார். அது போலவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நாசருக்கு தங்கையாக நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

ஒரே நடிகை ரம்யா கிருஷ்ணன் தானா?

இதனை அடுத்து பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிரபல நடிகரோடு மகளாக, மனைவியாக, சகோதரியாக நடித்த நீலாம்பரிக்கு எங்களது வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதை எடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

உண்மையிலேயே பிரபல நடிகர் ஒருவருக்கு மகளாக, தங்கையாக, மனைவியாக நடித்திருக்க கூடிய இவரது நடிப்பு திறமையை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் திரையுலக வரலாறு இவர் பெயரை சொல்லக்கூடிய வகையில் இந்த விஷயம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.

இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணனுக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வரக்கூடிய வேளையில் அவர் இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version