“இந்த வயசுல இப்படியா.. என்னமா நீங்க இப்டி பண்றீங்களேம்மா..” ரம்யா கிருஷ்ணனை பார்த்து ரசிகர்கள் வியப்பு..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இவர் தனது 14 வயதிலேயே சினிமா பயணத்தை ஆரம்பித்து இன்று வரை சக்கை போடு போடும் நடிகைகளில் ஒருவராக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் 1985-இல் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்தவர்.

இவர் நடிப்பில் தழிழில் வெளி வந்த கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, பாகுபலி போன்ற திரைப்படங்கள் திரைவுலகம் உள்ள வரை இவரது பெயரை சொல்லும்.

மாஸான நடிகையாக இருக்கும் இவர் 2023 ஆம் ஆண்டு வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த்தோடு ஜோடி போட்டு நடித்திருந்தார். ஏற்கனவே படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் அசத்தியவர் இந்த படத்திலும் தன் பங்கை பக்காவாக செய்திருந்தார்.

வெப் சீரியலில் சூடான ரொமான்ஸ்..

தற்போது இருக்கும் திரையுலக நடிகைகள் அனைவரும் சினிமா, சின்னத்திரை சீரியல் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிப்பது போலவே வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகைகள் முதற்கொண்டு வளர்ந்து வரும் நடிகைகள் வரை வெப் சீரியலில் நடித்து வரும் வேளையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் வெப் சீரியலில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

அதுவும் இந்த வெப் சீரியலில் எப்படி நடிக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த வயசுல இப்படியா? ஏம்மா.. நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா.. என்ற வசனத்தை பேசி கேள்விக்கணைகளை தொடுத்து இருக்கிறார்கள்.

இந்த வயசுல தேவையா..

இதற்கு காரணம் 50 வயதுக்கு மேல் ஆகும் ரம்யா கிருஷ்ணன் இந்த வெப் சீரியஸில் தன்னை விட வயதில் குறைவான இளம் நடிகர் ஒருவருடன் சூடான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரம்யா கிருஷ்ணனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. என்ற வசனத்தை பேசி இருப்பதோடு இந்த வயசுல இப்படியா? என்று வியந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த வெப் சீரியல் எப்போது வெளிவரும் அதை காண்பதற்கு ஆவலாக இருக்கிறோம். ஏனென்றால் ஏற்கனவே சூடான இது போன்ற காட்சிகளில் இளமையில் நடித்திருக்கும் இவரை இந்த வயதிலும் பார்க்க இன்னும் சில ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

எது எப்படியோ மீண்டும் களம் இறங்கி இருக்கும் ரம்யா கிருஷ்ணனின் காட்டில் மட்டுமல்ல, அவர்களின் ரசிகர்களின் காட்டிலும் இனி ரொமான்ஸ் மழை தான் என்று பேசிக்கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version