ப்பா.. உங்களுக்கு வயசே ஆகல.. ரம்யா கிருஷ்ணன்-ஐ பார்த்து வாய் மேல் விரல் வைத்த ரசிகர்கள்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு நடிகை நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆரம்பகாலத்தில் இந்தியில் பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

 

இளமையில் இவர் நடித்திருக்கும் ஹிந்தி படங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும் அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகைகளே பயப்படும் அளவிற்கு படு கிளாமரான காட்சியில் நடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஆனால், சில ஹிந்திப் படங்களில் மட்டுமே நடித்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்காமல் தவிர்த்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக என்னால் வர முடிந்தது.

ஆனால் ஹிந்தியில் எனக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. நான் என்னுடைய முழு திறமையையும் காட்டி நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. எனவே தென்னிந்திய சினிமாவை அப்படியே விட்டுவிட்டு பாலிவுட்டில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்ததே கிடையாது.

அதன் மீது எனக்கு ஒரு பயம் இருந்தது. தென்னிந்திய சினிமாவில் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. படங்களில் நடிக்கிறோம் என்றால் அந்த படம் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

தொடர்ந்து நான் நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்து கொண்டே இருந்தால் நம்முடைய அடையாளமே காணாமல் போய்விடும். தமிழ், தெலுங்கில் நடிப்பது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. கதைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது.

பஞ்சதந்திரம் படத்தில் மேகி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் மிகவும் விரும்பி நடித்த கதாபாத்திரம் அது. இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

படையப்பா படத்தில் வில்லியாக நடித்து இருந்தேன் ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்தார்கள். அப்படி இருக்கும் பொழுது தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இதனால்தான் இந்தி படங்களை தவிர்த்து விட்டேன் என்று கூறுகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போதும் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடைகளில் தோன்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாய் மேல் விரல் வைத்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …