தமிழ் சினிமாவில் ரஜினியை எதிர்த்து நடித்த ஒரே நடிகை ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பாவில் நடித்த நீலாம்பரியை சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது.
அந்த கேரக்டரில் மீனா நடிக்க ஆசைப்பட்ட போது, அதில் ரம்யா கிருஷ்ணன் நடித்தால்தான் சரியாக வரும் என்று ரஜினியே மீனாவிடம் சொல்லி சமாதானம் செய்திருக்கிறார்.
அதன்பிறகு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக ஒரு கம்பீரமான நடிப்பை தந்திருப்பார் ரம்யாகிருஷ்ணன்.
அந்த கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு பொருத்தமாக இருந்திருக்குமா, என்பது சந்தேகம்தான்.
இப்படிப்பட்ட ஆளுமையாக கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன், பஞ்ச தந்திரம் படத்தில், மரகதவள்ளி அலைஸ் மேகி என்ற கால் கேர்ள் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார்.
ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம் படத்தில்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படிக்காதவன் படத்தில், ரஜினியின் தம்பிக்கு மனைவியாகவும் நடித்திருப்பார்.
ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு பட இயக்குநர் வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். அவர்களது திருமண வாழ்வில் எந்த பிரச்னையும் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், ரம்யாகிருஷ்ணன் குறித்து யாரும் அறியாத புதிய தகவல்களை நேர்காணல் ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை ரம்யா கிருஷ்ணனை பற்றிய பின்னணி பலருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் சோ ராமசாமியின் அக்கா மகள்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தது சோவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவருடன் பல ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
அவர் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து பெயர், புகழ் அடைந்த பின்புதான் சோ, ரம்யாகிருஷ்ணனுடன் மீண்டும் பேசினார். ஜெயலலிதாவுக்கே குருவாக இருந்த தனது தாய் மாமா சோ குறித்து, யாரிடமும் பேசாமல் இருந்து வந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணனின் அரசியல் பின்னணி பெருசா இருந்ததால், அவரிடம் யாரும் வாலாட்ட முடியவில்லை என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.