“சுற்றிலும் 100 ஆண்கள்.. பாத்ரூம் இல்லை.. அதனால..” பேச்சு வாக்கில் கூறிவிட்டு.. சமாளித்த ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளின் மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அதில் பேசிய அவர் தற்போது தான் படப்பிடிப்பு தளங்களுக்கு கேரவன் வருகிறது. அதில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால், 80, 90களில் எல்லாம் கேரவன் என்ற ஒரு விஷயமே இல்லை.

படப்பிடிப்புக்கு செல்லும் ஊர்களில் நாம் தங்குகின்ற ஹோட்டல் அல்லது வீடுதான் நமக்கு கிடைக்கும். ஆனால், சில நேரம் நாம் தங்கி இருக்கும் இடத்திற்கு மிகவும் தொலைவில் சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும்.

அப்படியான நேரங்களில் உடை மாற்றுவதில் இருந்து இயற்கை உபாதை கழிப்பது வரை நடிகைகளுக்கு ஒரு மோசமான கட்டம் தான். நடிகர்கள் பொது வெளியில் சட்டையை கழட்டி மாற்ற முடியும். அவர்களுக்கு இயற்கை உபாதை கழிப்பது என்பது பெரிய சங்கடமான விஷயமாக இருக்காது. கஷ்டம் தான் ஆனாலும் பெண்கள் அளவுக்கு அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்காக காட்டுப்பகுதி ஒன்றுக்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். ஒரு பாடல் காட்சி படமாக வேண்டியதாக இருந்தது. அந்த இடத்தில் நான் கலா மாஸ்டர் ஆகியோர் சென்றிருந்தோம்.

அங்கே சாப்பிட்ட உணவு மற்றும் அதிகபட்ச வெயில் காரணமாக எனக்கு லூஸ் மோஷன் ஏற்பட்டது. சுற்றிலும் எப்படி பார்த்தாலும் 100 ஆண்கள் இருப்பார்கள். பாத்ரூம் கூட இல்லை. படப்பிடிப்பு தளத்திலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தாண்டி சென்றால்தான் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி இருக்கும். ஏனென்றால் படப்பிடிப்பு நடப்பதால் சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள்..

எந்த பக்கம் சென்றாலும் ஆட்கள் இருக்கிறார்கள். என்ன செய்வது..? என்று தெரியவில்லை அந்த நேரத்தில் கலா மாஸ்டருக்கும் லூஸ் மோஷன் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் காட்டுப்பகுதிக்குள் நானும் கலா மாஸ்டரும் ஓடினோம்.

கிட்டத்தட்ட ஒரு 50, 700 மீட்டர் ஓடி இருப்போம் எங்கு திரும்பினாலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு இடத்தை கண்டறிந்து எங்களுடைய பிரச்சனை சரி செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

ஆனால் தற்போது இருக்கும் நடிகைகளுக்கு இப்படியான பிரச்சினைகள் எதுவும் இல்லை என பேசி இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். நான் சொன்ன விஷயத்தில் அந்த லூஸ் மோஷன் என்ற விஷயத்தை மட்டும் எடிட் பண்ணி போட்டுடுங்க என்று சமாளித்தார் ரம்யா கிருஷ்ணன்.

அதை கேட்ட தொகுப்பாளராக அமர்ந்திருந்த KPY பாலா.. கவலைப்படாதிங்க மேடம்.. நீங்க லூஸ் மோஷன் என சொன்னதை ஸ்லோ மோஷனில் போட்டு ப்ரோமோஷன் பன்றோம் என கலாய்க்க அரங்கம் அலறியது.

அதேசமயம் துணை நடிகைகள் பலர் பேட்டி கொடுக்கும் பொழுது ரம்யா கிருஷ்ணன் சொன்ன அந்த பிரச்சனை தங்களுக்கு இருப்பதாக கூறி இருக்கின்றனர். ஏனென்றால் படத்தில் நடிக்கக்கூடிய முன்னணி கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் கேரவன் வசதி இருக்கிறது.

தவிர துணை நடிகைகளுக்கு பின்னணி டான்சர்களுக்கு என சரியான வசதிகளை செய்து கொடுப்பது கிடையாது என குற்றம் சாட்டும் பிரபலங்களும் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version