தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும், சில நடிகைகள் மீது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. அந்த நடிகைகள் கவர்ச்சியாக நடித்தாலும் ரசிப்பார்கள். கம்பீரமான கேரக்டர்களில் நடித்தாலும் அதையும் கைதட்டி வரவேற்பார்கள்.
ரம்யாகிருஷ்ணன்
நடிகை ரம்யாகிருஷ்ணன், சில படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் படையப்பா படத்தில், நீலாம்பரி கேரக்டரில் நடித்து ரசிகர்களை அசத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிரியாக, வில்லி கேரக்டரில் அவர் நடித்ததை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயினர்.
ரஜினிகாந்தே, அந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்தான் நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் வற்புறுத்தி இருக்கிறார்.
அதன்பின், பான் இந்தியா படமான பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணனை தவிர யாரையுமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கம்பீரமான நடிப்பை தந்து அசத்தியிருந்தார்.
ஆனால் இதே ரம்யாகிருஷ்ணன்தான், பஞ்ச தந்திரம் படத்தில் மேகி என்கிற கேரக்டரில் மாடர்ன் ரவுடிப்பெண்ணாக நடித்திருப்பார்.
ரம்யா கிருஷ்ணனை பொருத்த வரை, அலட்டலை வெளிப்படுத்தாமல் கேரக்டரை உள்வாங்கி நடிக்கும் ஒரு திறமையான நடிகை. படையப்பா படத்தில், வில்லியாக நீலாம்பரி கேரக்டரில் நடித்த அவரே, ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பார். இப்போது விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்திலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். 53 வயதிலும் அவரது நடிப்பும், கலையாத உடல் கட்டழகும் ரசிகர்களை இன்னும் அவர் பக்கமாக வசீகரித்து வைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்:தன் மகன் இறப்பதற்கு 10 நிமிடம் முன்பு காமெடி நடிகர் விவேக் என்ன செய்தார் தெரியுமா..?
சினிமாவில் வாய்ப்பு
14 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து விட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் பட வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது நடிகர் நாகர்ஜுனா ஹீரோவாக நடிக்கவிருந்த சங்கீர்த்தனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினுக்கான வேட்டையில் ஈடுபட்டிருந்தார் புதுமுக இயக்குனரான கீதா கிருஷ்ணா. இவருடைய இந்த வேட்டையில் சிக்கினார் ரம்யா கிருஷ்ணன்.
லட்சுமி என்ற கதாபாத்திரத்தில்
அதற்கு முந்தைய வருடம் தான் நடிகை சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சக்ரவர்த்தி என்ற படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.
அந்த படம் ஹிட் அடிக்கவே ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத் துறையில் நல்ல அறிமுகம் கிடைத்தது.
இதையும் படியுங்கள்:ஆண் துணையில்லாமல் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதியின் கண்ணீர் கதை..!
வேட்டையில் சிக்கினார்
அந்த நேரத்தில் ஹீரோயினுக்கான வேட்டையில் ஈடுபட்டிருந்த புதுமுக இயக்குனர் கீதா கிருஷ்ணா அழகு பதுமையான ரம்யா கிருஷ்ணனை அந்த வேட்டையில் சிக்கினார். அதன்பிறகுதான் நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஜோடியாக சங்கீர்த்தனா என்ற திரைப்படத்தில் ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா கதாநாயகிக்கான தேடுதலில், 17 வயதில் நடிகை ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடியது டைரக்டர் கீதா கிருஷ்ணாதான் என்பதும் கவனிக்கத்தக்கது.