அர்ஜென்ட்டா வந்துடுச்சு.. பாத்ரூம் இல்ல.. அந்த நேரத்தில்.. வெக்கமின்றி கூறிய ரம்யா கிருஷ்ணன்..!

90காலகட்டம் முதல் தற்போது வரை பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரில் கச்சிதமாக பொருந்தி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் வியக்க வைப்பார்.

ரம்யா கிருஷ்ணன்:

இவரது நடிப்பு திறமையை கண்டு ரஜினியே அசந்து போனதும் உண்டு. இவர் குறிப்பாக படையப்பா திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

சிறந்த நடிகைக்காக தென் இந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் , 4 தமிழக அரசு திரைப்படம் விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்று கௌரவிக்கப்பட்ட நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மலையாள படத்தின் மூலமாகத்தான் தனது நடிப்பை துவங்கினார்.

ஆம், “நெரம் புலரும்போல் ” என்கிற மலையாள படத்தில் நடித்து முதன் முதலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.
அறிமுகப் படம்:

அதன் பிறகு 1985 இல் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்த வெள்ளை மனசு என்ற படம் தான் இவர் நடித்த முதல் திரைப்படம்.

அப்போது ரம்யா கிருஷ்ணன் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் படிக்காதவன், கமல்ஹாசனுடன் பெயர் சொல்லும் பிள்ளை உள்ளிட்ட படத்தில் நடித்தார்.

மேலும், கேப்டன் பிரபாகரன், அம்மன், படையப்பா, நாகேஸ்வரி, பஞ்சதந்திரம் ,உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக 90ஸ் காலகட்டங்களில் வலம் வந்து கொண்டிருந்தார்.

இவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு,அமிதாபச்சன், அக்கினி நாகார்ஜுனா, ஜெகபதிபாபு சிரஞ்சீவி என தென்னிந்திய சினிமாவின் பல நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணன்:

இதனிடையே பாகுபலி திரைப்படத்தில் நடித்து ராஜமாதா சிவகாமி தேவியாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பாராட்டப்பட்டார்.

அந்த திரைப்படம் வணிக ரீதியாக பாராட்டு பெற்று பெரும் சாதனை படைத்ததோடு. ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் தேடி கொடுத்தது.

இதனிடையே சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

மேலும், தொலைக்காட்சி தொகுப்பாளியாகவும், தொலைக்காட்சி நடுவராகவும், திரைப்பட நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்துகிறார் ரம்யா கிருஷ்ணன்.

இவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

53 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் தனது மார்க்கெட் குறையாமல் மிகச்சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

இதனிடையே சமீபத்தில் பேட்டி உள்ள சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிக மோசமான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன் .

காட்டில் கழிவறை இல்லாமல் அவதி:

அந்த பேட்டியில் நடிகைகளுக்கு அவுட்டோர் ஷூட்டிங் சமயத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்று கேட்டீர்கள் ஆனால்… “கழிவறை” தான்.

ஒரு முறை ஒரு படத்தின் சூட்டிங் காட்டில் நடந்தது அங்கு கழிவறை வசதியோ, கேரவனோ எதுவுமே கிடையாது.

பயங்கரமான வெயில் வேறு அங்கு பாத்ரூம் கூட போக முடியல. பயங்கரமான சூட்டால் எனக்கும் கலா மாஸ்டருக்கும் லூஸ் மோஷன் ஆகிவிட்டது.

அந்த சமயத்தில் கழிவறை கூட கழிவறை வசதி கூட இல்லாததால் நாங்கள் காட்டுக்குள் தேடி அலையாத இடமே கிடையாது.

எப்போ சூட்டிங் முடியும் அப்படின்னு காத்துகிட்டு இருப்போம்.. என்று தான் பட்ட வேதனையை மிகவும் வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணனின்.

ரம்யா கிருஷ்ணனின் இத பேட்டியை பார்த்த ரசிகர்கள், நடிகைகளுக்கு இவ்வளவு பிரச்சனையா என வருத்தத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version