பிளாஸ்டிக் சர்ஜரி..? முகத்தை 18 வயசு பொண்ணு போல மாற்றிய ரம்யா கிருஷ்ணன்..! ரசிகர்கள் வியப்பு..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் நீண்ட காலமாக திரையுலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.

இது வரை இவர் 4 தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள், மூன்று நந்தி விருதுகள் மற்றும் தமிழக அரசின் திரைப்பட சிறப்பு விருந்தினை பெற்றிருக்கக் கூடிய இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

நடிகை ரம்யா கிருஷ்ணன் சிறு வயது முதற்கொண்டு பரதநாட்டியம், குச்சி புடி போன்ற நடனங்களை கற்றுக் கொண்டு மேடைகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

இவர் 14 வயதிலிருந்து திரைப்பட வாழ்க்கையில் துவங்கியவர். இன்று வரை முன்னணியில் இருப்பது இவரது திறமையால் என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் 1985-இல் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்து வெளி வந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் தான் இவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அத்தோடு ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படிக்காதவன் திரைப்படத்திலும் கமலஹாசன் நடித்த பெயர் சொல்லும் பிள்ளை படத்திலும் துணை வேடத்தில் நடித்த இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

2015-ஆம் ஆண்டு வெளி வந்த ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அசத்தியதோடு மட்டுமல்லாமல் அண்மையில் வெளி வந்த ஜெயிலர் திரைப்படத்திலும் ரஜினியோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அம்மன் படத்தில் அம்மனாக நடித்த இவர் பஞ்சதந்திரம் படத்தில் மேகியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். எத்தகைய கேரக்டர் ரோலையும் மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய தன்மை நிறைந்த நடிகைகளுக்கு முன்னுதாரணமாக இவரை சொல்லலாம்.

பிளாஸ்டிக் சர்ஜரியா..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவார். அந்த வகையில் தற்போது இவர் இணையத்தில் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பல்வேறு வகையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

ஏறக்குறைய 50 வயதை கடந்து இருக்கக் கூடிய ரம்யா கிருஷ்ணனின் முகம் தற்போது பார்ப்பதற்கு 18 வயது பெண் போல மாறி இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இதற்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரியா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

அத்தோடு ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் 18 வயது பெண் போன்ற முகத்தோற்றத்தோடு மிகவும் இளமையாக காட்சியளித்திருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டார்களா? என்ற சந்தேகத்தை தற்போது கிளம்பி வருகிறார்கள்.

18 வயது பெண் போல ரம்யாவின் முகம்..

ஏற்கனவே திரை துறையில் இருந்த ஸ்ரீதேவி முதல் பலரும் இது போன்ற பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்து கொண்டு திரையில் வலம் வரக்கூடிய வேளையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தனது வயதான தோற்றத்தை மறைக்க இது போல செய்திருக்கலாம்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அவரது புகைப்படமும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

மேலும் ரம்யா கிருஷ்ணனின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருவதை அடுத்து அவர்கள் நண்பர்களுக்கும் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version