இந்த நடிகைகளுக்கு அது என்னை விட பெருசு.. இதை சொல்வதில் எனக்கு கூச்சமில்ல.. ரம்யா கிருஷ்ணன் ஒரே போடு..

சினிமா படங்களில் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல புதுமுக நடிகைகளுக்கு போதிய வரவேற்பும், ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் இருக்காது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் நிற்பதற்கு கூட நேரமில்லாத அளவுக்கு, பிஸியான நடிகையாக மாறிவிடுவார்கள்.

ரம்யா கிருஷ்ணன்

மணிவண்ணன் இயக்கத்தில், முதல் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் ரம்யா கிருஷ்ணன். சத்யராஜ், மலேசியா வாசுதேவன் வில்லன்களாக நடித்திருந்த இந்த படத்தில், மலேசியா வாசுதேவன் மகளாக நடித்திருப்பார்

இந்த படத்தி்ல் ரம்யாகிருஷ்ணன். பாண்டியனை காதலிப்பார். படகோட்டியாக சந்திரசேகர் நடித்திருப்பார்.

முதல் படமே ரம்யாகிருஷ்ணனுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதில் ஆறும் அது ஆழம் இல்லே, என்ற பாடல் இன்றும் டிரண்டிங் பாடலாக இருக்கிறது.

அம்மன் வேடத்தில்

கடந்த 1990களில் வெளிவந்த இந்த படத்தை தொடர்ந்து பேர் சொல்லும் பிள்ளை, படிக்காதவன் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார் ரம்யாகிருஷ்ணன். அதன்பிறகு அம்மன் போன்ற படங்களில் அம்மன் வேடத்தில் நடித்தும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இதையும் படியுங்கள்: உங்களுக்கு வெக்கமே இல்லையா.. ராதிகாவை திட்டிய நடிகை தனுஷ்.. என்ன ஆனது..?

படையப்பா நீலாம்பரி

பல படங்களில் நடித்தாலும், ரம்யாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்த படம் படையப்பா தான். அதில் ரஜினியை எதிர்க்கும் நீலாம்பரி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் பெரிய வரவேற்பை பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் இந்த கேரக்டரில் நீலாம்பரியாக ரம்யாகிருஷ்ணன்தான் நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் கறாராக பேசியிருக்கிறார். ஏனெனில் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் ஆசைப்பட்டவர் நடிகை மீனா. ரஜினியிடமே பேசியும் மறுத்து விட்டார்.

ராஜமாதா சிவகாமியாக

அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பு, மிக கம்பீரமாக அமைந்தது.

ரம்யாகிருஷ்ணன், நடிகர் சோ ராமசாமியின் சொந்த அக்கா மகள்தான் என்பது பலரும் அறியாத உண்மை. துவக்கத்தில் ரம்யாகிருஷ்ணன், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட போது அதை மறுத்தவர் சோ.

இதையும் படியுங்கள்:  உலகமாக கவர்ச்சிடா சாமி.. உலகநாயகி நயன்தாரா தாறு மாறு போஸ்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

பிறகு அவர் சினிமா நடித்த காலகட்டத்தில் சோ அவருடன் கோபம் கொண்டு சில ஆண்டுகள் பேசாமல் இருந்துள்ளார். பிறகு பெரிய நடிகையாக பெயர் வாங்கிய பின், ரம்யாகிருஷ்ணனை சோ அழைத்து பாராட்டி இருக்கிறார்.

ஜெயிலர் படத்தில்…

இப்போது ரம்யாகிருஷ்ணன் பிஸியான நடிகையாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து, விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

பெருசாக இருந்தது

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை ரம்யாகிருஷ்ணன், நான் நடிக்க வந்த காலகட்டத்தில் நடிகைகள் ரேவதி மற்றும் நதியாவிற்கு என்னைவிட மார்க்கெட் பெருசாக இருந்தது உண்மைதான். இதை ஒப்புக் கொள்வதற்கு எனக்கு கூச்சம் எதுவும் கிடையாது என, வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

அவர் சொல்வது உண்மைதான், கடந்த 1990களில் நடிகைகள் ரேவதி, நதியா போன்றவர்களுக்கு சினிமாவில் மார்க்கெட், ரம்யாகிருஷ்ணனை விட பெரியதாக இருந்தது. ஆனால் இப்போது, அவர்கள் இருவரை விட ரம்யாகிருஷ்ணனுக்குதான் மார்க்கெட் பெரிதாக இருக்கிறது என்பதும் உண்மைதான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version