பெற்ற மகன் முன்னால் அந்த கோலத்தில் சிக்கிய ரம்யா கிருஷ்ணன்.. பல நாள் தூக்கம் தொலைத்த ரகசியம்..!

இந்திய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து இன்றும் தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றிய அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அம்மன் வேடம் என்றாலும் சரி அரைகுறை கவர்ச்சி வேடம் என்றாலும் சரி இவர் பக்காவாக அந்த கேரக்டரை செய்து முடித்து விடுவார்.

படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து அசத்திய இவர் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து அனைவரையும் வாய் அடைக்க வைத்தார். இன்று வரை இவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லக் கூடிய வகையில் பல விருதுகளை வென்றவர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்..

தற்போது 54 வயது ஆனாலும் திரைப்படத் துறையில் தனி முத்திரை பதித்திருக்கும் இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கலக்கி வரும் நடிகையாக விளங்குகிறார். இது வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்ன திரையில் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க: “அந்த போட்டோவை நினைச்சாலே.. இன்னைக்கு வரைக்கும்..” – குமுறும் நடிகை ஸ்ரீரஞ்சனி..!

மேலும் இவர் கலசம், தங்கம், வம்சம் போன்ற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அண்மையில் இவர் ரஜினியோடு இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

பெற்ற மகன் முன்னாள்..

நடிகை ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆபாச படங்களில் நடிக்க கூடிய நடிகையாகவும் தன்னுடைய மகன் கண் முன் அந்தக் கோலத்தில் சிக்குவது போன்ற காட்சிகளும் நடித்திருப்பார்.

முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது நடிகை நதியா தான். ஆனால் தன்னுடைய பெயரை இந்த பாத்திரம் கெடுத்துவிடும் என்று நடிகை நதியா பின் வாங்கிய நிலையில் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு சைலன்ட் ஆகிவிட்டார்.

பல நாள் தூக்கம் தொலைத்த ரகசியம்..

எனவே இந்த கேரக்டர் ரோலில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் உடன்பட்டதோடு படத்தில் துணிச்சலாக நடித்து முடித்துக் கொடுத்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாள் இரவு தூக்கம் இல்லாமல் தவித்து இருக்கிறார்.

இதற்கு காரணம் பெற்ற மகன் முன்பு அப்படி ஒரு கோலத்தில் சிக்கியது போன்ற காட்சியில் நடித்திருக்கிறோமே.. பெற்ற மகனே தன்னை தே**** என்று அழைப்பது போன்ற காட்சிகள் நடித்திருக்கிறோமே.. இந்த கதாபாத்திரம் இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த அனைத்து பெயரையும் கெடுத்து விடுமோ? என்ற ஒரு விதமான அச்சத்தில் இருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: அட கொடுமைய.. 60 வயது முதியவருக்கு மனைவியான ரச்சிதா மகாலட்சுமி..? யாருன்னு பாருங்க..

ஆனால் சூப்பர் டீலக்ஸ் படத்தின் இயக்குனர் மற்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கொடுத்த நம்பிக்கை ரம்யா கிருஷ்ணனுக்கு சற்று தெம்பாக இருந்துள்ளது. பின்னர் படம் வெளியான பிறகு ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை பாசிட்டிவாக பலரும் பேசி கொண்டார்கள். அதன் பிறகு தான் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தூக்கமே வந்தது என்ற தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த செய்தியை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தற்போது கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பரவி வைரலான நியூஸாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version