ஒரிஜினல் நாட்டுகட்ட.. ஜிவ்வுன்னு இருக்கு.. சுண்டி இழுக்கும் அழகில் ரம்யா நம்பீசன்..!

2000ம் ஆண்டு முதல் தமிழ், மலையாளம் என்று இரண்டு சினிமாவிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். தமிழில் ஒரு சில திரைப்படங்கள் நடித்த பிறகு இவருக்கு நிறைய வரவேற்பு கிடைக்க துவங்கியது.

இரண்டு மொழிகளில் நடித்தாலும் இரண்டு மொழியிலும் பேச தெரிந்த ஒரு நடிகையாக ரம்யா நம்பீசன் இருந்து வருகிறார். 2000 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார் ரம்யா நம்பீசன். அதனை தொடர்ந்து நிறைய மலையாள படத்தில் அவருக்கு வரவேற்பு கிடைத்தது.

2004 வரை இவர் மலையாள திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். தமிழில் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த ஒரு நாள் ஒரு கனவு என்கிற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் நடிகை ரம்யா நம்பீசன்.

ஆரம்பக்கால திரை வாழ்க்கை:

அதனை தொடர்ந்து தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் அதற்குப் பிறகு வந்த குள்ளநரி கூட்டம் தான்.

2011 ஆம் ஆண்டு வந்த குள்ளநரி கூட்டம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்திருந்தார். கதாநாயகியை வைத்துதான் படத்தின் மொத்த கதையும் செல்லும் என்பதால் மிக முக்கியமான கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.

அதனை தொடர்ந்து தமிழில் அடுத்து அவர் நடித்த பீசா திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருந்தது. பெரும்பாலும் படங்களில் நடிக்கும்போது நல்ல திரைக்கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.

நல்ல கதைகள்:

அதனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு பேசப்படும் திரைப்படங்களாகவே இருந்திருக்கிறது. அதற்குப் பிறகு தமிழில் அவர் நடித்த டமால் டுமீல், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், சேதுபதி போன்ற திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்றன.

அவர் தமிழில் நடித்த திரைப்படத்திலேயே சத்யா என்கிற திரைப்படம்தான் குறைவான வரவேற்பை பெற்ற திரைப்படம் என்று கூறலாம். சமீபத்தில் வெளியான ரத்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அடிக்கடி இன்ஸ்டா புகைப்படங்களை வெளியிடும் ரம்யா நம்பீசன் சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். இவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam