நடிகை ரம்யா நம்பீசன் சந்தன நிற சேலையில் தேர் போல நடந்து வரும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரை படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன்.
இவர் சினிமாவில் பின்னணி பாடகியாக நுழைந்தவர் கேரள மாநிலம் கொச்சியில் பகுதியைச் சேர்ந்த நடிகை ரம்யா நம்பீசன் பாடகியாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
பின்னணி பாடகியாக தன்னுடைய சினிமா தொடர்புகளை வளர்த்துக் கொண்டார் நடிகை ரம்யா நம்பீசன். தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
குறுகிய காலத்திலேயே ஹீரோயினாகவும் முன்னேறினார். தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ரம்யா நம்பீசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.
இந்நிலையில், புடவை சகிதமாக இவர் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், நடந்து வருது சந்தன தேரு.. இப்படியே விட்டா பத்திக்கும் ஊரு.. என ரசிகர்கள் அவள் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்