இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி.. டூ பீஸ் உடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு சில தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திருநெல்வேலியில் பிறந்த பெண் என்பதால் அவருக்கு தமிழ் சினிமாவில் கொஞ்சம் வரவேற்பு உண்டு.

கல்லூரி முடித்த உடனே தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதற்காக முயற்சி செய்யத் தொடங்கினார் நடிகை ரம்யா பாண்டியன். நடிகர் அருண்பாண்டியன் ரம்யா பாண்டியனின் மாமா என்பதால் மிக எளிதாகவே தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

2015 இல் வாய்ப்பு:

தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு டம்மி தப்பாசு என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. ஆனால் ஜோக்கர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்தபோதுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார்.

ஆனாலும் கூட ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

அப்பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அதிக பிரபலமாகவே அதன் மூலமாக ரம்யா பாண்டியன் பிரபலமாக துவங்கினார். இதற்கு நடுவே தமிழில் வெளியான பிக் பாஸ் தொடரின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ரம்யா பாண்டியன்.

தமிழில் ட்ரெண்டிங்:

பிறகு ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற திரைப்படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் 2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெகுவாக பேசப்பட்ட நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.

 

இதற்கு நடுவே சில வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன் முகிலன் என்கிற ஜி5 சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்றுள்ளார் ரம்யா பாண்டியன்.

எனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ரம்யா பாண்டியன் இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்துவதற்காக சிறப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

அந்த புகைப்படங்கள்தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …