காதல் தோல்வியால் துவண்டு போயிட்டேன்.. என்னை மீட்டது இவங்க தான்.. ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..!

கண் சிமிட்டும் நேரத்தில் காதல் வருவதும் அதே நேரத்தில் காதல் கை நடுவி போவதும் எதார்த்தமான ஒன்று தான் என்றாலும் நடிகை ரம்யா பாண்டியன் விவகாரத்திலும் இந்த காதல் விளையாடி அவரை விரக்தியில் தள்ளி இருந்ததாக அண்மை பேட்டி ஒன்றில் சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டதை அடுத்து எப்போது ரம்யா பாண்டிகனுக்கு திருமணம் ஆகும் என்ற கேள்விகள் வலுத்து வந்த நிலையில் தற்போது தனது உடன்பிறந்த சகோதரி திரிபுரசுந்தரையுடன் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

காதல் தோல்வியால் துவண்டு போயிட்டேன்..

போதுமான அளவு திரைப்படங்கள் கிடைக்காததை அடுத்து ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டதை அடுத்து கமலஹாசன் சிரித்துக் கொண்டே ஊசி போடும் மருத்துவர் என்று சொல்லி இருப்பார்.

அப்படிப்பட்ட இவரது வாழ்க்கையில் இப்படி ஒரு லவ் ஃபெயிலியர் உள்ளதா? என்று ஆச்சரியப்பட கூடிய வகையில் அவர் மனதில் மறைத்து வைத்திருந்த அந்த வலியை வெளிப்படையாக கொட்டி தீர்த்து விட்டார்.

இந்த ரம்யா பாண்டியன் வேறு யாரும் இல்லை 2015-ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர் 2016 -ஆம் ஆண்டு ராஜ் முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து போதுமான பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு கலக்கி வரும் இவர் 33 வயதாகியும் என்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

பிக் பாஸ்க்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளிவந்த ராமனே ஆண்டாலும் ராவணனே ஆண்டாலும் என்ற படத்தில் நடித்ததோடு அல்லாமல் மலையாளத்தில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இடும்பன் காரி எனும் படத்தில் நடித்து வரும் இவர் தனது தங்கைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

குடும்பத்தை அனுசரித்து செல்லக்கூடிய மாப்பிள்ளை கிடைத்தால் பரவாயில்லை. பிளேபாயே தனக்கு வேண்டாம் என்று அக்கா ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

என்னை மீட்டது இவங்க தான்..

மேலும் நடிகை ரம்யா பாண்டியன் பேசும் போது தனக்கு ஏற்பட்ட பிரேக்கப்பில் இருந்து எப்படி மீண்டு வருவது என தெரியாமல் இருந்த சமயத்தில் என் அக்கா, அம்மா தான் என்னை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள் அதனால் தான் என் உடல் இளைத்து விட்டது என்றும் சொன்னார்.

மேலும் அக்கா மூலம் தான் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருவதாக சொன்ன இவர் ஆன்மீகத்தில் திடீர் என்று ஆர்வம் ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்று தயங்காமல் பதில் அளித்தார்.

ரம்யா பாண்டியன் ஓப்பன் டாக்..

இதனை அடுத்து விரைவில் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கட்டாயம் ரம்யா பாண்டியன் திருமணம் செய்து கொள்வார் என்ற நிலையில் தான் தற்போது இருக்கிறார். தனது பிரேக்கப் பற்றி ஓபன் டாக்காக சொன்னதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரை ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனின் பிரேக்கப் குறித்து ஒவ்வொரு வரும் பேசி வருகிறார்கள்.

மேலும் இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டதை அடுத்து காதல் தோல்வியால் துவண்டு போயிருந்த ரம்யா பாண்டியன் எப்படித்தான் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பதை சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version