மீனாவை பொண்ணு கேட்டு சென்ற பிரபல நடிகர்..! இதுவரை பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்த பின் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கும் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த படங்கள் மாஸ் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.

தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த நடிகை மீனா இன்று வரை எவர்கிரீன் நடிகையாக ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்துக் கொண்டவர்.

நடிகை மீனா..

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை மீனா சென்னையில் இருக்கும் வித்யோதயா பள்ளியில் சிறுவயதில் படித்தவர். மேலும் சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து பத்தாம் வகுப்பை தனியார் பயிற்சியின் மூலம் தேர்ச்சி பெற்றார்.

இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டில் திறந்தவெளி பல்கலைக்கத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்றில் பட்டம் பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் பேசி கலக்கக் கூடியவர்.

உலக நாயகன் கமலஹாசனோடு இணைந்து நடித்த ஔவை சண்முகி திரைப்படத்தில் இவரது சிறப்பான நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டுகள்களை தெரிவித்திருக்கிறார்கள்.அது போல பொற்காலம் படத்திலும் இவரது நடிப்பு மிக நேர்த்தியான முறையில் வெளிப்பட்டு இருந்தது.

மீனாவைப் பெண் கேட்டுச் சென்ற பிரபல நடிகர்..

திரை உலகில் நடிப்பு துறையில் இருக்கும் போது கிசுகிசுக்களில் சிக்காத நடிகையான இவர் பீக்கில் இருக்கும் போதே பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அப்படி வித்யாசாகரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் மீனாவைப் பெண் கேட்டு சென்ற விஷயம் பற்றி அண்மை பேட்டி ஒன்று பயில்வான் ரங்கநாதர் பகிர்ந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.

அந்த நடிகர் அந்த சமயத்தில் மீனா உடன் இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததை அடுத்து நேராக மீனா வீட்டுக்கு சென்று அவர் அம்மாவிடம் மீனாவை பெண் கேட்டு இருக்கிறார்.

இதுவரை அறிந்திடாத தகவல்கள்..

இதனை அடுத்து மீனாவின் அம்மாவோ மீனாவிற்கும் அந்த பிரபல நடிகருக்கும் வயது வித்தியாசம் அதிகம் உள்ளது என்ற கருத்தை சொன்னதோடு மட்டுமல்லாமல் தற்போது தான் தன் மகள் சினிமாவில் முன்னணி நடிகையாக வரக்கூடிய சூழ்நிலைகள் அமைந்திருப்பதால் எந்த சமயத்தில் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதனை அடுத்து மீனாவை திருமணம் செய்து கொள்ளக் கூடிய விவகாரத்தில் இருந்து அந்த நடிகர் விலகிவிட்டார். அந்த நடிகர் யார் தெரியுமா? அவர் தான் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

இந்த விஷயமானது அன்று பல ஊடகங்களில் வெளி வந்த போதும் இது பற்றி பயில்வான் சொன்னதை அடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டதோடு அட இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version