“அவங்கள பத்தி கவலை இல்ல..” – தென்னிந்திய சினிமா குறித்து கிண்டல் செய்த ராஷ்மிகா..! – கடுப்பில் ரசிகர்கள்..!

ஏ.. சாமி.. வாயா சாமி.. என்று இழுத்து இழுத்து நாட்டுப்புறப் பாடலைப் பாடி விவகாரமான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டு ரசிகர்களை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் நேரடியாக நடித்த தமிழ் படங்களை விடவும் தெலுங்கு படமான புஷ்பா படத்தின் தமிழ் டப்பிங்கில் இவருடைய பிரபலம் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும்.

ஆனால் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறா.ர் இந்த திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

மறுபக்கம் தன்னுடைய திரைத்துறை நண்பரும் நடிகருமான விஜய் தேவரகொண்டா இவரை காதலித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியானது. இது ஒரு பக்கமிருக்க சமீப காலமாக நடிகை ராஷ்மிகா ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

கர்நாடக சினிமா துறையினர் மீது துறையினர் ராஷ்மிகா மீது கொண்டுள்ள கோபம் தான் அதற்கு காரணம். சமீபத்தில் தன்னுடைய திரைப்படம் குறித்தும் வெற்றிகள் குறித்தும் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் ரிஷப் செட்டி பற்றியோ ரக்ஷித் ஷெட்டி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் ஏதோ வானத்தில் இருந்து குதித்து என்பதுபோல பேசியிருந்தார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், பாலிவுட் சினிமாவில் தான் நல்ல ரொமான்டிக் பாடல்கள் இருக்கிறது. ஆனால், தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் கவர்ச்சியாக குத்தாட்டம் போடக்கூடிய பாடல்கள்.. கிளுகிளு பாடல்கள் மட்டும் தான் இருக்கிறது என்று கூறி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையே பகைத்துக் கொண்டார்.

மேலும் விஜய்தேவரகொண்டா உடன் மாலத்தீவில் தனிமையில் தங்களுடைய காதலை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். வாரிசு ஆடியோவில் க்யூட்டாந எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேன் என்று க்ரிஞ்சுத்தனமான சில விஷயங்களை செய்து ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானார் நடிகை ராஷ்மிகா.

ஒரு நடிகையாக ரசிகர்கள் பிடிக்கிறது ஆனால் இவர் பேசுவது சில விஷயங்களை செய்வதெல்லாம் பார்க்கும் பொழுது கடுப்பாக இருக்கிறது என்று பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஆனால், இதுகுறித்து என்ன கூறுகிறார் என்று கேட்டார்.. இதற்கெல்லாம் நான் ஒருபோதும் கவலைப்பட மாட்டேன்.. என் செயல் பிடித்தவர்களுக்கு பிடிக்கட்டும்.. பிடிக்காதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

அவர்களின் என் செயலை பார்த்து குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், என்னை பிடித்தவர்கள் எனக்கு அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை நேசிக்க எனக்கு நேரமில்லை.

அப்படி இருக்கும் பொழுது என்னை குறை கூறிக்கொண்டிருபவர்களுகு பதில் கூற எனக்கு எப்படி நேரம் இருக்கும் என்னை ரசிப்பவர்களுக்கு நன்றியுடையவர்களாக நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

**இது நித்யானந்தா வசனம் ஆச்சே..!

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version