நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்ன இப்படி தூங்கி வழியறிங்க மாலத்தீவில் மட்டும்தான் மஜாவா இருப்பீங்களா..? என்று கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர்.
மறுபக்கம் மாலத்தீவுக்கு சென்றபோது நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அவருடன் இருந்தார் எனவே தான் அவர் ஆக்டிவாக மஜாவாக போஸ் கொடுத்திருந்தார் ஆனால் தற்போது தனிமையில் இருப்பதால் தூங்கி வழியும் முகத்துடன் போஸ் கொடுத்திருக்கிறார். சோக ரேகைகளை முகத்தில் ஓட விட்டு போஸ் கொடுத்து இருக்கிறார் என்று விவகாரமான கருத்துக்களையும் பதிவு செய்யும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
சமீபகாலமாக நடிகை ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார். என்றாலும் கூட கன்னட சினிமாவினரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்.
மறுபக்கம் இப்படியான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மோசமான கருத்துக்களை எதிர் கொண்டு வருகிறார். சமீபத்தில், நான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டால்.. என்னை ஏதோ பையன் போல இருப்பதாக கூறுகிறார்கள்..
உடற்பயிற்சி செய்யாமல் குண்டாகி விட்டால் குண்டாகிவிட்டேன் என்று கலாய்ப்பார்கள்… நான் என்னதான் செய்ய வேண்டும்.,..? என்று தன்னுடைய புலம்பல்களை கொட்டி தீர்த்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இந்த புலம்பல் அடங்குவதற்குள் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எதுக்கு இப்படி தூங்கி வழியுறீறீங்க. மாலத்தீவில் எப்படி மஜாவா இருந்தீங்க.. அதேபோல் இந்த புகைப்படங்களை வெளியிட வேண்டியதுதானே என்று விளாசல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படி உரலுக்கு ஒரு பக்கம் அடி… மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி.. என்பது போல நடிகை ராஸ்மிகா மந்தனா எந்த பக்கம் திரும்பினாலும் அந்த பக்கம் அடி விழுகிறது இதனால் மிகுந்த மனவேதனை இருக்கிறார் என்பது இவர் வெளியிடக்கூடிய பதவிகள் மூலம் பார்க்க முடிகிறது நிலையில் இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.