ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு; வாய் பிளக்கும் ரசிகர்கள்

சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியானது. சினிமாவுக்குள் வந்த குறுகிய காலத்தில், இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என, ரசிகர்கள் வாய் பிளந்து ஆச்சரியப்படுகின்றனர்.

கன்னட படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. கீதாகோவிந்தம் படம், இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து, புஷ்பா படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். தெலுங்கில் வெளியான இந்த படம், தமிழிலும் வந்ததால், ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார்.

இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், விஜய் உடன் வாரிசு படத்திலும் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். இன்னும் பல தமிழ் படங்களில் அவர் நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

பாலிவுட்டில் மூன்று படங்களில் நடிக்க, ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகி இருப்பதாக, தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், சென்சார் குழு உறுப்பினர், சினிமா விமர்சகர் உமைர் சந்து என்பவர். பரபரப்பான ஒரு டிவிட்டை பதிவு செய்துள்ளார்.

அதில், ராஷ்மிகா மந்தனாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 125 கோடி எனவும், மேலும், இவருக்கு பணக்கார பாய் பிரண்ட்ஸ் நிறைய பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது, தற்போது வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …