ராஷ்மிகாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? சுத்தி போடணும் போல இருக்கே.. வைரல் போட்டோஸ்..!

தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்திருக்கும் ராஷ்மிகா கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். வணிகவியல் பட்டதாரியான இவர் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்திலும் இளம் கலை பட்டம் பெற்றவர். நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் திடீர் என்று இவர் திருமணம் நடக்கவில்லை.

இளைஞர்களின் க்ரஸ்..

தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா இந்திய இளைஞர்களின் க்ரஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு பான் இந்திய நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் அனிமல் படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தை பொருத்தவரை இவர் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

இவரைப் பற்றி அடிக்கடி கிசு கிசுக்கள் அதிகளவு ஊடகங்களில் வெளிவரக்கூடிய சூழ்நிலையில் எதைப்பற்றியும் இவர் கவலைப்படாமல் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக நடிகர் விஜய தேவரகொண்டாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி செய்திகள் உலா வரும்.

இந்நிலையில் டீப் பேக் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகாவின் ஆபாச வீடியோவை வெளியிட்ட விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியதோடு கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளானது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் ராஷ்மிகா இணையங்களில் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார்.

ராஷ்மிகாவின் ஃபேமிலி போட்டோ..

அந்த வகையில் இப்போது ராஷ்மிகாவின் ஃபேமிலி போட்டோ ஒன்று இணையத்தில் வெளி வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

என்னதான் படு பிஸியான நடிகையாக இருந்தாலும் குடும்பத்திற்காக சில மணி நேரங்களாவது செலவிடும் போது தான் குடும்பம் குடும்பமாக இருக்கும் என்ற கருத்தை உணர்த்தக்கூடிய வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய பேமிலி போட்டோ உள்ளது.

சுத்தி போடுங்க பாஸ்..

நடிகை ராஷ்மிகா கர்நாடகாவில் உள்ள விராஜ்பேட் ஊரில் 1996 ஆம் ஆண்டு மதன் மந்தனா சுமன் மந்தனா தம்பதிக்கு பிறந்தார் இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார். இவர் தற்போது தனது அப்பா, அம்மா, தங்கை யோடு இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் படு வைரலாக பரவி வருகிறது.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் நேஷனல் கிரிஷ் நடிகையின் குடும்பமா? இது என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு சுத்தி போடுங்க.. பாஸ் கண்ணு பட்டுவிடப் போகிறது என்ற கருத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.

அழகான குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற வார்த்தைக்கு ஏற்ப இந்த புகைப்படம் உள்ளதாக ரசிகர்கள் கூறி வருவதோடு தொடர்ந்து இந்த புகைப்படத்தை இணையத்தில் பார்த்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தாலும் குடும்பத்தோடு காட்சியளித்திருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவு பார்த்து இணையத்தில்  அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை நிலை என்ன என்பது எளிதாக தெரிந்து விடும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version