நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ் தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான குட்பை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தொடர்ந்து பாலிவுட்டிலும் பயணித்து கொண்டிருக்கும் இவர் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மிஷன் மஜ்னு என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.
அவர் கூறியதாவது தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா பாடல்கள், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மூடில் தான் பாடல்கள் வருகின்றது. ஆனால், பாலிவுட்டில் தான் ரொமான்டிக்கான மெலடியான பாடல்கள் வருகின்றன.
மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமான்டிக் பாடல் இருக்கிறது. அதனை கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். பொதுவாக பாலிவுட் செல்லும் நடிகைகள் தென்னிந்திய சினிமாவை மட்டம் தட்டும் விதமாக பேசுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
நடிகை இலியானா இப்படித்தான் பேசி இருந்தார். தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் காணாமல் போய்விட்டார். அதேபோல நடிகை ராஷ்மிகா-வும் பாலிவுட் சினிமாவில் நுழைந்த போதையில் தென்னிந்திய சினிமாவை மட்டும் தட்டும் விதமாக பேசியிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும்போது நீங்கள் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வேண்டும்..? நடிக்க தேவையில்லை என்பது போன்ற காட்டமான கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க.. இவர் வெளியிட்டுள்ள க சில புகைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.