ராஷ்மிகா மந்தனா ரகசிய திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலத்திற்கு அறிமுகமானார்.

கர்நாடகத்தில் இருக்கும் குடகு மாவட்டத்தில் பிறந்த இவர் கூர்க் பொதுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு பட்டப் படிப்பை பெங்களூரில் இருக்கும் எம்எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் படித்திருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா 2016-இல் அவர் நடித்த கிரிக் பார்ட்டி திரைப்படம் அதிகளவு வசூலை தந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறியது.

இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு இவர் அஞ்சனி புத்ரா, சமக் ஆகிய இரண்டு கன்னட படங்களில் நடித்ததை அடுத்து சமக் படத்தில் நடித்ததற்காக 65 ஆவது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

தமிழைப் பொறுத்த வரை 2021-ஆம் ஆண்டு சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வணிக அளவில் வெற்றியை தந்ததை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

மேலும் 2023-ஆம் ஆண்டு வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

ரகசிய திருமணமா?

இதனை அடுத்து இந்தியாவின் கிரஸ் நடிகை என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா தென்னிந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் கோலோச்ச ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவர் அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார்.

மேலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவராக இருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய தேவரகொண்டா இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்ற விஷயம் கசிந்துள்ளது.

ஏற்கனவே இவர்கள் இருவர் பற்றிய காதல் சமாச்சாரம் அடிக்கடி இணையங்களில் அதிக அளவு உலா வந்த போதும் அது பற்றிய உண்மை நிலை பற்றி இருவரும் இது வரை எந்த ஒரு உறுதியான விளக்கமும் தரவில்லை.

மாப்பிள்ளை யாரு தெரியுமா?

இந்நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் விரைவில் இவர்களுடைய திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவார்கள் என்ற கிசுகிசுக்கள் அதிகளவு இணையங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடிகை ராஸ்மிகாவும் விஜய தேவரகொண்டாவும் காதலித்து வருகிறார்கள் என்ற தகவல்கள் வெளி வந்துள்ள நிலையில் தற்போது அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் இது குறித்து ராஷ்மிகா மந்தனா தரப்பிலிருந்தோ விஜய தேவரகொண்டா தரப்பிலிருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் உண்மை இருக்குமா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையோ அல்லது மறுப்பையோ விரைவில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவராவது வெளியிடுவார்களா? என்று எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version