ராணி போல வாழும் ராஷ்மிகா மந்தனா..! – Rashmika Mandanna Net Worth எத்தனை கோடி தெரியுமா..?

Rashmika Mandanna Net Worth  : தற்பொழுது தன்னுடைய 27 வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா அதன் பிறகு கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்பட்டார்.

இந்த படத்தினால் கிடைத்த புகழ் நடிகர் ராஷ்மிகா மந்தனாவின் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுகளை மாற்றியது. அதாவது, தன்னுடைய முதல் படமான க்ரிக் பார்ட்டி படத்தை இயக்கிய இயக்குனரும் தயாரிப்பாளருமான என்பவரை ரக்சித் ஷெட்டி என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா அவரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு தன்னுடைய திருமணத்தை ரத்து செய்து விட்டதாக அறிவித்தார்.

ஏனென்றால் தனக்கு சினிமாவில் சிறப்பான எதிர்காலம் இருப்பதை உணர்ந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்ற முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரக்ஷித் செட்டியுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகளில் இருந்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா டந்த 2016-ம் ஆண்டு ரக்‌ஷித் செட்டியின் க்ரிக் பார்ட்டி படம் ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டிலேயே அதிக வசூல் ஏட்டிய கன்னட படமாக இது இருந்தது.

சமீபத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்த ஒரு படத்திற்கு நான்கு கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறுகிறார்கள். மேலும் ஒரு ஆண்டில் 8 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார் என்றும் மட்டும் இல்லாமல் விளம்பர படங்கள் உள்ளிட்டவற்றிலும் கோடிக்கணக்கில் இவருக்கு வருமானம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

சினிமாவில் நடிக்க வரும் முன்பே இவர் கோடீஸ்வரி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின்பு இவருடைய பிரபலம் மட்டும் இல்லாமல் இவருடைய சொத்து மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

பெங்களூருவில் சுமார் 8 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவுக்கு சொந்தக்காரியான ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் மும்பையில் பிரபலங்கள் வசிக்கக்கூடிய ஒரு இடத்தில் மிகப்பெரிய பிளாட் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கிறார்.

ஹிந்தி படங்களில் நடிப்பதற்கு ஏதுவாகவும் மும்பை மற்றும் வடநாடுகளுக்கு செல்லும் பொழுது தங்குவதற்கு ஏதுவாகவும் இந்த பங்களாவை வாங்கி இருக்கிறார் நடிகை என்று கூறுகிறார்கள்,

இவர் பயன்படுத்தக்கூடிய ரேஞ்ச் ரோவர் கார்  கிட்டத்தட்ட ஒன்றை கோடி மதிப்புள்ளது. இந்த கார் மட்டும் இல்லாமல் ஆடி Q3, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மட்டுமில்லாமல் சாதாரண டொயோட்டா இன்னோவா கார் ஒன்றையும் வைத்திருக்கிறார் நடிகை கார்.

விலை உயர்ந்த கார்கள் எத்தனை இருந்தாலும் அடிக்கடி இவர் பயன்படுத்தக்கூடிய கார் என்றால் அது டொயோட்டா இன்னோவா என்று கூறுகிறார்கள். சினிமா விளம்பர படங்கள் என ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் என்பது கோடியிலிருந்து நூறு கோடி ரூபாய் வரை சொத்துக்கள் சேர்த்து இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராணி போல ராயல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த நாள் மற்றும் விஜய் தேவாரகொண்டா இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …