பெரிய்ய்ய மச்சம் இருக்கும் போல.. ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி என மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த பல வெற்றி படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார்.

ராஷ்மிகா மந்தனா:

அத்துடன், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவு ம் டாப் ஹீரோயினாகவும் இடத்தை பிடித்திருக்கிறார்.

இவர் கன்னட திரைப்படத்தில் முதன் முதல் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க “சலோ” என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார்.

இரண்டாவது படமே கீதா கோவிந்தம் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்த்த நடிகையாக ரஷ்மிகா மந்தனா பெரும் புகழும் புகழ் பெற்றார்.

தொடர்ந்து தெலுங்கில் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் அவருக்கு அடுத்த அடுத்த வெற்றி படங்களாக அமைந்தது.

தமிழில் அறிமுகம்:

அதன் பிறகு தமிழ் மொழியிலிருந்து வாய்ப்புகள் தேடி வர சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

அந்த படத்தின் மாபெரும் வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் தெலுங்கில் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

இதனிடையே. பாலிவுட்டில் நடிகையாக சென்ற ராஷ்மிகா அங்கு முதல் படமே அமிதாப்பச்சன் நடித்த “குட் பை” என்ற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அங்கு தனது தடத்தை பதித்தார்.

முதல் படமே அமிதாப்பச்சன் படம் என்பதால் ராஷ்மிகா மீதான பாலிவுட் ரசிகர்களின் கவனம் பாயத் துவங்கியது.

பாலிவுட்டில் பாய்விரித்து படுத்த ராஷ்மிகா:

அதன்படி பாலிவுட் நட்சத்திர நடிகர் ஆன ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி படமாக மாற்றினார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று மிகவும் மோசமாக சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் ராஷ்மிகாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டுவிட்டது

இதனால் பாலிவுட் நடிகைகளே அச்சத்தில் இருக்கும் வகையில் ராஷ்மிகா மந்தனா தனது மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டினார்.

அடுத்தடுத்த நட்சத்திர நடிகர்களின் பார்வை ராஷ்மிகாவின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து அவரை புக் செய்து பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கிடந்தார்கள்.

இப்படியான நேரத்தில் ராஷ்மிகா மந்தனா தனது தனது மூன்றாவது ஹிந்தி படத்தில் கமிட் ஆகினார்.

இப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களுள் ஒருவரான சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

“சிக்கந்தர்” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் ஆன ஏ ஆர் முருகதாஸ் தான் இறக்குகிறார்.

அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட திரைப்படமாக சிக்கந்தர் படம் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சல்மான் கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா:

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் கடைசியாக நடித்து வெளிவந்த அனிமல் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி ஆயிரம் கோடி வசூலை நெருங்கி மாபெரும் சாதனை படைத்தது.

அடுத்ததாக ராஷ்மிகாவின் கைவசம் புஷ்பா 2 மற்றும் தனுசுடன் குபேரா உள்ளிட்ட படங்கள் கைவசம் இருப்பதால் தற்போது ராஷ்மிகா இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

இப்படியான நேரத்தில் சல்மான் கான் சிக்கந்தர் திரைப்படத்தில் இணைந்து இருப்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிறி உள்ளது.

சிக்கந்தர் திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்து படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக பட குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

சிக்கந்தர் படத்தை எடுப்பதற்காக ஏ ஆர் முருகதாஸ் ஏற்கனவே சிவகார்த்திகேயன் படம் ஒன்றை இயக்குவதாக அதில் கமிட் ஆகியிருந்தார்.

பெரிய மச்சக்காரி ராஷ்மிகா:

ஆனால், அந்த படத்தில் இருந்து விலகி தற்போது சல்மான் கான், ராஷ்மிகாவை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கம் மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

விரைவில் படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளிவரலாம். இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய மச்சம் இருக்கும் போல….

அதனால் தான் அடுத்த படத்தின் ஹீரோவாக இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகரான சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version