விஜய்யா..? இல்ல, விஜய் தேவரகொண்டாவா..? ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..!

1996-ஆம் தேதி ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்த ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் கன்னட படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

தற்போது ரசிகர்கள் விரும்பும் நடிகைகளில் ஒருவராக திகழும் ராஷ்மிகா மந்தனா விஜய தேவர்கொண்டா மற்றும் விஜயோடு இணைந்து நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம். இதை அடுத்து இவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இவர் எப்படி பதில் அளித்தார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

விஜய்யா..? இல்ல, விஜய் தேவரகொண்டாவா..?

ராஷ்மிகா மந்தனா விஜய்யோடு வாரிசு திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நடனத்திறனுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலுக்கு சிறப்பான முறையில் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தார்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்திருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகவே உள்ளது.

மேலும் தென்னிந்திய சினிமாவில் அழகாக கவர்ச்சியை காட்டக்கூடிய இவர் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி நடிப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து ரசிகர்களை மகிழ்விக்க கூடிய வகையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

ராஷ்மிகா மந்தனா கொடுத்த..

இந்த புகைப்படங்களை பார்த்து சொக்கிப் போய் இருக்கும் ரசிகர்கள் இவரை அதிகளவு ஃபாலோ செய்து வருவதால் எப்போதுமே ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு இணையங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவரிடம் உங்களுக்கு விஜயை பிடிக்குமா? இல்லை விஜய தேவர கொண்டவா? அவர்கள் பற்றி ஓரிரு வார்த்தைகளில் விளக்க வேண்டும் என்ற கேள்வி வைக்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதை அடுத்து சிரித்த வண்ணமே இதற்கு பதில் அளித்தார்.

இந்த பதில் என்னவாக இருக்கும் என்று நீங்கள் ஆர்வத்தோடு காத்திருப்பீர்கள். அவர் சொன்ன பதிலை கேட்டால் நீங்கள் வாய் அடைத்து போவீர்கள் அந்த அளவு சாதுரியமான முறையில் பதிலை அடித்து தப்பித்துக் கொண்டு விட்டார்.

பதிலை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்..

மேலும் அவர் கூறிய பதிலில் தளபதி விஜய்யை பார்த்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரைப் பார்த்து வளர்ந்து சினிமாத்துறைக்கு வந்தவர் என்ற கருத்தை முன்வைத்த இவர் விஜய தேவர் கொண்டாவை பற்றி கூறும்போது அவர் தனக்கு சிறந்த நண்பர் என்று ஒற்றை வரியில் சொல்லி
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இப்படி மலுப்பிட்டீங்களேம்மா என்ற கேள்வியை முன் வைத்து இருப்பதோடு இந்த பதிலை கேட்டு ஷாக்கான ரசிகர்கள் அதிக அளவு உள்ளார்கள் என்று சொல்லலாம்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version