மீண்டும் வெடிக்கும் சர்ச்சை… ! என்ன ஆச்சு ராஷ்மிகா மந்தானா? ரசிகர்கள் குமுறல்…!!மீண்டும் வெடிக்கும் சர்ச்சை… ! என்ன ஆச்சு ராஷ்மிகா மந்தானா? ரசிகர்கள் குமுறல்…!!

 தென்னிந்திய படங்களில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தானா தற்போது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதை  வழக்கமாக மாற்றிவிட்டாரோ என்று தோன்றும் வகையில் தான் அவரது ஒவ்வொரு பேசும் உள்ளது.

 அந்த வரிசையில் தற்போது தென்னிந்திய பாடல்களை விட பாலிவுட் பாடல்கள் தான் ரொமான்டிக் பாடல்கள் என்பதை ஓபன் ஆக கூறி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

 இந்த கருத்தை அவர் மிஷன் மஜ்னு நிகழ்ச்சியின் போது பாலிவுட் பாடல்கள் தென்னிந்திய பாடல்களை விட ரொமான்டிக் நிறைந்த பாடல்கள் என்று கூறியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

 தற்போது சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து மிஷன் மஜ்னு என்ற பாலிவுட் படத்தில் நடித்த வருகிறார். இந்த படமானது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அன்று நெட் பிளக்சில் நேரடியாக வெளியிடப்படக்கூடிய நிலையில் உள்ளது.

இதனை முன்னிட்டு இந்த படத்தின் விளம்பரங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் பாடல் வெளியீட்டு விழாவின் போது திரை உலகில் பாடல்களில் தாக்கத்தை பற்றி பேசி இருந்தார்.

 அவர் பேசும்போது வெளியிட்ட அந்த கருத்து தான் தற்போது  பேசும் பொருளாக மாறிவிட்டது.மேலும் இவர் பேசிய விதத்தை அடுத்து தென்னிந்திய ரசிகர்களிடமிருந்து வெறுப்பை இவர் சம்பாதித்துக் கொண்டாரோ என்ற தோன்றும் அளவுக்கு தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் ராஷ்மிகா மந்தானாவை ட்விட்டரில் கடுமையாக திட்டி வருகிறார்கள்.

 உண்மையான விஷயத்தை அவர் மறந்துவிட்டு இப்படிப்பட்ட கருத்தை பதிவு செய்திருக்கிறாரா? என்று கேட்டதோடு மட்டுமல்லாமல் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் ஏ ஆர் ரகுமான் பாடல்கள் பற்றி ராஷ்மிகாவுக்கு தெரியாதா? அல்லது உருப்படியான தெலுங்கு பாடல்களைப் பற்றி அவர் ஏன் குறிப்பிடவில்லை? என்ற கேள்வி உடன் பாலிவுட்டில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஐட்டம் சம்பந்தமான பாடல்கள் என்பதை அப்பட்டமாக ஒத்துக் கொள்ளாமல் இப்படி மாற்று கருத்தை பதிவு செய்து இருப்பது அவர் மேல் கடுமையான கடுப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

 ஏற்கனவே கன்னட திரை உலகை ராஷ்மிகா மந்தானாவின் படத்தை வெளியிடுவதற்கோ அல்லது மீண்டும் அவர்களுக்கு பட வாய்ப்புக்  கொடுப்பது பற்றி யோசித்து வருகின்ற வேளையில் இது போன்ற பொறுப்பில்லாத கருத்துக்களை வெளியிட்டு மீண்டும் இவர் தென்னிந்திய திரை உலகினரை வெறுப்பை சம்பாதித்துக் கொள்வது அவசியம் தானா? என்பதை யோசிக்காமல் செயல்படுகிறார் என்ற கேள்விகளையும் பல பேர் கேட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version