கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் நிலைமை இதுதான்.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா..!

இந்திய ரசிகர்களின் கிரஷாக விளங்கும் ராஷ்மிகா மந்தானா ஆரம்ப நாட்களில் கன்னடப்படத்தில் நடித்து அசத்தியவர். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனதை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார்.

தற்போது பாலிவுட் படங்களிலும் கலை கட்டி வரும் ராஷ்மிகா மந்தானா சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளி வந்த அனிமல் திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சுமார் 900 கோடி ரூபாய் வசூலை தந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான இவர் அண்மையில் வெளி வந்த தளபதி விஜயின் வாரிசு படத்தில் அசாத்திய நடிப்புத் திறமையை காட்டிய இவருக்கு அதிகளவு தமிழ் வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தி பக்கம் சென்றிருக்கக் கூடிய இவர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி வளர்ந்து இருக்கிறது என்பதை பற்றி பேசி இருக்கிறார்.

தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிக்க இந்த படம் ஹிட்டானதை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக மாறிய இவர் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படுகிறார்.

தற்போது ஹிந்தி படங்களில் முழு கவனத்தை செலுத்தி வரும் இவர் குட்பை, மஜ்னு அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்ததின் மூலம் எக்ஸ்பிரஷன் குயின் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார்.

பத்து வருடத்தில் இந்தியாவின் நிலைமை..

அனிமல் படத்தின் வெற்றியை அடுத்து தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருக்கும் ராஷ்மிகா மந்தானா சல்மான் கானை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக விஷயங்கள் கசிந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் கடல் பாலமான அடல் சேது பாலத்தில் பயணம் செய்தது குறித்து ராஷ்மிகா ஓபன் ஆக பேசியிருக்கிறார்.

ஓபன் ஆக பேசிய விவகாரம்..

அப்படி அவர் பேசும் போது அடல் சேது பாலத்தில் பயணம் செய்த அனுபவத்தை மறக்க முடியாது என்றும் இந்த பாலம் கட்டப்பட்டதால் இரண்டு மணி நேர பயணமானது 20 நிமிடங்களில் முடிந்து விட்டதாக கூறினார்.

மேலும் இவர் 10 வருடங்களில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இந்த பாலம் உள்ளது என சொல்லி இருக்கிறார்.

இந்த பாலத்தில் பயணம் செய்த போது இவ்வளவு சீக்கிரத்தில் தனது பயணம் முடியும் என்று எதிர்பார்க்காமல் இருந்த இவருக்கு இது ஆச்சரியம் அளித்ததாக கூறியதை அடுத்து இந்த விஷயம் வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.

மேலும் ராஷ்மிகா மந்தானா அடல் சேது பாலத்தை கூறியதோடு மட்டுமல்லாமல் இந்தியா ஒரு உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்று சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது.

இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து என்றாவது ஒரு நாளாவது இந்த பாலத்தை பயணம் செய்து ராஷ்மிகா பெற்ற அனுபவத்தை ரசிகர்களும் பெற வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version