நீச்சல் குளத்தில் இதை செய்தால் இன்பமாக இருக்கும்.. யாருக்கும் வெளிய தெரியாது.. கூச்சமின்றி கூறிய ராஷ்மிகா மந்தனா..!

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையால் என்ற பேன் இந்திய நடிகையாக உயர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இவர் கர்நாடகாவில் இருக்கும் விராஜ் பேட்டையில் கௌடா குடும்பத்தில் பிறந்தவர். மேலும் கூர் பொதுப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த இவர் பெங்களூரில் இருக்கும் எம் எஸ் ராமையா கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல் இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றவர்.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

2016-ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2017-இல் மீண்டும் இரண்டு கன்னட படங்களில் நடித்ததை அடுத்து 2018-இல் கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்த இந்த படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் இவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கிய தேவதாஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியை தந்ததை அடுத்து இவரது நடிப்பு ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டதோடு மிக நல்ல பேச்சையும் கொடுத்தது.

இதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல தெலுங்கு படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த படம் இவருக்கு வணிக ரீதியில் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இதனை அடுத்து அதிக அளவு தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று காத்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2023-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். எனினும் இவருக்கு போதுமான அளவு தமிழில் வாய்ப்புகள் வருவது குறைவாகவே இருந்தது.

நீச்சல் குளத்தில் இதை செய்தால் இன்பமாய் இருக்கும்..

மேலும் தென்னிந்திய மொழி படங்களோடு நின்று விடாமல் ஹிந்தி திரைஉலகிலும் நடிக்க ஆரம்பித்த இவர் அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டார்.

ஏனெனில் தென்னிந்திய படங்களில் நடித்ததை விட கூடுதல் கிளாமரோடு முத்த காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டியதை அடுத்து கடுமையான கருத்து விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர். இவர் அடிக்கடி ரசிகர்களை கவரக்கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு திணற வைப்பார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இதை செய்தால் இன்பமாக இருக்கும். ஆனால் அது யாருக்குமே வெளியே தெரியாது என்று கூச்சமின்றி ராஷ்மிகா கூறிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

வெளியே தெரியாது.. கூச்சமின்றி கூறிய விஷயம்..

அப்படி என்ன விஷயத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார் என்று கேட்டால் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீர் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு அலாதி இஷ்டம் இருக்கும். அது போல இவருக்கும் தண்ணீர் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

எனவே தான் ராஷ்மிகா தன்னை வாட்டர் பேபி, நீர் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி இருப்பதோடு அதுவும் நீச்சல் குளம் என்றால் எனக்கு அலாதியான பிரியம் உள்ளது என்பதை சொல்லி இருக்கிறார்.

அத்துடன் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு அழுதாலும் இன்பம் தான். ஏனென்றால் நம் கண்ணீர் வருவது வெளியே யாருக்குமே தெரியாது. இதை சொல்வதற்கு எனக்கு கூச்சம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version