இந்திய சினிமாவின் கிரஷ்ஷாக கருதப்படுகிற ராஷ்மிகா கன்னடம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்த வருகிறார்.
கர்நாடகாவில் பிறந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுக நாயகியாகி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ராஷ்மிகா..
தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த பேரழகியாக ராஷ்மிகா விளங்குகிறார். தமிழில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளை நழுவ விடாமல் நடித்து வரும் இவர் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த வாரிசு திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தெலுங்கில் தற்போது படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடந்து வருகிறது.
அண்மையில் இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது இவர் கூறியிருக்கும் விஷயமானது ஒவ்வொரு மனிதரையும் யோசிக்க வைக்க கூடிய வகையில் உள்ளது.
சின்ன வயசுல அந்த பழக்கம்..
மேலும் இந்த பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கப்படுத்திக் கொள்வதின் மூலம் மிகுந்த நன்மை அடையலாம் இது நமது மரபும் கூட என்று சொன்னாலும் தவறில்லை.
அப்படி என்ன சிறு வயது முதற்கொண்டு அவர் அந்தப் பழக்கத்தில் இருந்திருக்கிறார் என்றால் பெரியவர்களை எப்போதும் மதிக்க வேண்டும் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதைத்தான் மூத்த சொல் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்ற பழமொழி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகை ராஷ்மிகா சின்ன வயதில் இருந்தே தன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
மேலும் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள் ஏன் இவர்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய வயதில் மூத்தவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதை இன்று வரை வழக்கமாக வைத்திருக்கிறார்.
கூசாமல் வெளியிட்ட ரகசியம்..
அப்படி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கும் பொழுது அது நமக்கு பல நன்மைகளை தருவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். எனவே தான் வீட்டில் வேலை செய்யும் பெரியவர்கள் காலில் கூட நான் விழுகிறேன். இதை சொல்வதற்கு கூச்சம் இல்லை என்று ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
மேலும் சிறு வயது முதற் கொண்டே பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதால் தான் கர்வம் ஏற்படாமல் உள்ளது என்பதை வெளிப்படையாக கூறியதை அடுத்து, சின்ன வயசுல இருந்தே அந்த பழக்கம் இருக்கிறது என்று இதைத்தான் ராஷ்மிகா கூறினாரா? என்று ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும் என்ற அறிவுரையை தந்து வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், வயதில் மூத்தவர்களை வணங்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதால் நன்மையை ஏற்படும்.
இனியாவது இன்றைய இளைய தலைமுறை இதை உணர்ந்து கொண்டு ஃபாலோ செய்வார்களா? என்பதை இனி வரும் நாட்களில் மிகத் தெளிவாகத் தெரிந்துவிடும்.மேலும் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கி இருக்கும் நம் பிள்ளைகள் நமது கலாச்சாரத்தை மதிப்பதின் மூலம் அதை மீட்டெடுக்கலாம்.