மொழியை அவமாதித்தது மாதிரி ஆகிடும்.. அதனால் தான் இப்படி.. ராஷ்மிகா மந்தனா சொன்ன காரணம்..!

கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது பேன் இந்திய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மத்தியில் கிரஷ் ஆன நடிகை என்ற பெயரில் அழைக்கப்படுவதோடு இவருக்கு என்று ஒரு பெரிய அளவு ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா..

நடிகை ராஷ்மிகா ஆரம்ப நாட்களில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் திரைப்படமான அனிமல் திரைப்படத்தில் படு மோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இதனை அடுத்து இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கும் மற்றொரு ஹிந்தி படத்தில் ஹீரோயினியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

இந்நிலையில் புஷ்பா வெற்றியை அடுத் து புஷ்பா 2 திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் வெளி வந்தது. இதில் ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களை சுண்டி ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே புஷ்பா திரைப்படம்  ராஷ்மிகாவிற்கு ஒரு திருப்பு முனை திரைப்படமாக அமைந்ததை அடுத்து இந்தியா எங்கும் இவரது பெயர் உச்சரிக்கப்படுகின்ற நிலையில் இவர் நேஷனல் கிரஷ் ஆக உருவெடுத்தார்.

மொழிய அவமதித்த மாதிரி ஆகும்..

அது மட்டுமல்லாமல் இவர் பாடல்களுக்கு நடனம் ஆடும் போது மிகச் சிறந்த எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடக் கூடியவர்.

தமிழைப் பொறுத்த வரை இவர் முதல் முதலில் சுல்தான் படத்தில் நடித்தார். இந்த படம் போதிய அளவு வெற்றியை இவருக்கு தரவில்லை.

இதை அடுத்து தளபதி விஜய் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்தார். இந்த படமும் போதிய வெற்றியை தராததால் தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

இந்நிலையில் தமிழில் சிவகார்த்திகேயனோடு ஜோடி போட்டு ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது மட்டும் இன்றி வேறு சில படத்துக்கு நடிக்கக் கூடிய ஒப்பந்தங்கள் வந்திருப்பதால் அது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது சிங்கள் வெளியாகி உள்ளது. இதில் ராஷ்மிகாவின் நடனம் ரசிகர்களால் வெகுவாக பேசப்பட்டும் ரசிக்கப்பட்டும் வரக்கூடிய நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும் என்று ராஷ்மிகாவிடம் சொல்லி இருக்கிறார்.

ராஷ்மிகா சொன்ன காரணம்..

அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ராஷ்மிகா நான் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறேன். ஆனால் நான் அவர்களது மொழியில் பேசவில்லை என்றால் மொழியை அவமானப்படுத்தி விட்டதாக நினைப்பார்கள் அல்லது மொழியே தெரியாமல் நடித்தேன் என விமர்சிப்பார்கள்.

எனவே தான் நான் ஆங்கிலத்தில் பேசாமல் அந்தந்த மொழிகளில் நடிக்கும் போது அதே மொழிகளில் பேச முயற்சி செய்கிறேன். இதில் எந்த ஒரு தவறும் இல்லை. இப்படி செய்வதால் அது மக்கள் மத்தியில் எளிதில் போய் சேரும் என பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ராஷ்மிகா சொன்ன பதில் மிகவும் சரியான பதில் என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version