படுக்கையில் இருந்து இது கீழே விழுந்தால்.. என்ன சொல்லும்.. வைரலாகும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா. முதன் முதலில் தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் ஆன இவர் முதன்முதலில் கன்னட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ராஷ்மிகா மந்தனா:

இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் தான். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது.

அதை அடுத்து தொடர்ந்து கன்னட சினிமாவில் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மிக குறுகிய காலத்திலேயே கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ராஷ்மிகா மந்தனா சலோ திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பின்னர் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் விஜய்தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதை அடுத்து டியர் காம்ரேட் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

இதை அடுத்து தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அவர் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.

குறுகிய காலத்தில் டாப் இடத்தை பிடித்த ராஷ்மிகா

இப்படி மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தென் இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதை அடுத்து அவருக்கு ஹிந்தி சினிமாவில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ஹிந்தியில் பிரபல நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகினார். ஆனால், அந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

தொடர்ச்சியாக ஹிந்தி தமிழ் தெலுங்கு இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

படுக்கையில் இருந்து இது கீழே விழுந்தால்..

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது YouTube பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், என்னுடைய டீம் நபர்களுடன் ஜோக் அடித்துக் கொண்டிருந்தபோது எடுத்த வீடியோ இது என குறிப்பிட்டுள்ளார்.

அதில் ராஷ்மிகாவிடம் ஒருவர்… பெட்ஷீட் ஒன்று படுக்கையில் இருந்து கீழே விழுந்தால் அது என்ன சொல்லும் என கேட்டதற்கு…. Oh sheet என சொல்லும் என கூறியதற்கு ராஷ்மிகா விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

இந்த மொக்க ஜோக்குக்கே இப்படி சிரிக்கிறாரே ராஷ்மிகா என நெட்டிசன்ஸ் இந்த வீடியோவை வைரலாக்கியுள்ளனர்.

இதை பார்த்த ராஷ்மிகாவின் ரசிகர்கள் நேஷ்னல் க்ரஷ் ஆச்சே அப்படித்தான் நடந்து கொள்வார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version