சமந்தாவுக்கு பிறகு நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தனா..! மறுபடியும் மொதல்ல இருந்தா..?

இந்திய சினிமா ரசிகர்களால் நேஷ்னல் கிரிஷ் என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

அவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளியான க்ரிட் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா:

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த அழகிய பெண்ணான இவருக்கு அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மார்க்கெட் தக்க வைத்துக்கொண்டார்.

இதை அடுத்து அவருக்கு பலமொழிகளில் இருந்து படவாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது .

குறிப்பாக இந்தி சினிமாவில் தற்போது நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார் . ஹிந்தியில் அனிமல் திரைப்படத்தில் நடித்து அங்கு முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கார்.

தற்போது தமிழில் நடிகர் தனுஷ் நடித்து வரும் குபேரா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவது குறிப்பிடுத்தக்கது.

ஆபாச புகைப்பட சர்ச்சையில் ராஷ்மிகா:

இப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் ராஸ்மிகா மந்தனா பெயரும் புகழும் பெற்றதற்கு ஈடாக பெரும் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கி வருகிறார்.

ஆம், சமீப காலமாக நடிகைகளை பொய்யாக சித்தரித்து மோசமாக கவர்ச்சியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் ஆபாசமான புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இது அந்த நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நடிகைகளின் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்து வருகிறது. குறிப்பாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாக பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது .

சமீபத்தில் தான் ராஷ்மிகா மந்தனாவின் அது போன்ற புகைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியா சினிமாவை அதிரவைத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் புகைப்படம் ஒன்று வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீயாய் பரவும் டீப் பேக் புகைப்படம்:

ஆனால், இந்த புகைப்படம் கொலம்பியா நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனது Instagram பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை இப்படியாக சில்மிஷம் செய்து சில பேர் ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து இப்படி ஒரு புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்திருக்கிறார்கள் .

நீச்சல் உடையில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவா இது போன்ற கேவலமான உடையில் இருக்கிறார் என அவரை விமர்சித்துள்ளனர்.

ஆனால் இது உண்மையில் அவரது புகைப்படமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுபோன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்கள் நம்பும்படியாக எடிட் செய்து வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version