பத்து நிமிடத்திற்கு இம்புட்டு சம்பளமா..? – கிறுகிறுன்னு வருதே..! என்னங்க இது கொடுமையா இருக்கு..!

கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 2016ல் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.2018 ல் சலோ என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் கார்த்தியின் ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்த வருகிறார்.மிகக் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகி என்னும் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சமந்தா சாய் பல்லவி கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக சிறந்த படங்களில் நடித்து தனக்கென திரையுலைகள் தனி இடத்தை பிடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரசிகர்கள் இவரை பாலோவ் செய்து வருகிறார்கள். மூன்று கோடி ரசிகர்கள் பாலோவ் செய்த அடுத்த ஆறு மாதத்திலேயே மேலும் 50 லட்சம் ரசிகர்கள் இவரை பின்தொடர்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று கோடிக்கு மேல் ரசிகர்கள் தன்னைப் பின் தொடருகிறார்கள் என்பதற்காக தனது தோழிகளுக்கு பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பாக இவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பாகம் ஒன்று இவருக்கு மிகச்சிறந்த பெயரை திரையுலகில் எடுத்துக் கொடுத்தது.

குறிப்பாக சாமி சாமி பாடலுக்கான இவரது நடன அசைவுகள் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியதுடன் முன்னணி அந்தஸ்தையும் பெற்றுத் தந்துள்ளது. இதனால் புகழின் உச்சிக்கு சென்று விட்டார் என்றே கூறலாம்.

அறிமுகமானபோது 21 லட்சம் இவரது சம்பளம். தற்போது நான்கு மொழிகளுக்கும் சேர்த்து 1.2 கோடி சம்பளமாக கேட்கிறார் என்று புலம்பும் தயாரிப்பாளர்கள்.

மேலும் தற்போது இவர் நடித்து வரும் வாரிசு திரைப்படத்திற்கான ப்ரோமோ நிகழ்ச்சிக்கு இவர் சென்ற ஒவ்வொரு நகரத்திற்கும் இரண்டரை லட்சம் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ படத்திலும், அமிதாப் பச்சன் நடிக்கும் ‘குட்பாய்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

தொடர்ந்து பல மொழிகளில் சிறப்பாக நடித்து வருவதால் இவரது மார்க்கெட் மட்டுமல்லாது, சம்பளமும் உயர வாய்ப்புள்ளது என்ற பதட்டத்தில் தயாரிப்பாளர்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …