கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரல் ஆகி வரும் நபராக ரசிகனின் ரசிகன் மணி இருந்து வருகிறார். அவர் குறித்து வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சையாகி வருகிறது.
ரசிகனின் ரசிகன் மணி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி வந்த நபர் ஆவார். தொடர்ந்து இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருந்ததால் சில மகளிர் கல்லூரிகள் கூட அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தன.
மகளிர் மத்தியில் பிரபலம்:
அப்பொழுதே அவருக்கு இதற்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் இந்த வீடியோ விவகாரம் குறித்து பதில் அளித்து இருக்கிறார் மணி.
அதில் அவர் கூறும் பொழுது ”அந்த அந்தரங்க வீடியோவின் முதல் பாதியில் வருவது நான் தான் என்றும் ஆனால் அதற்கு அடுத்த பாதியில் வரும் அந்தரங்க வீடியோ என்னுடையது கிடையாது. வேறு வீடியோவோடு என்னை சேர்த்து எடிட் செய்துள்ளனர்” என கூறியுள்ளார்.
அதிரடி பதிவு:
இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் அதிக பிரபலமானதை அடுத்து சில நியூஸ் சேனல்களுமே கூட அவரை குறித்து செய்திகளை வீடியோவாக வெளியிட்டு வந்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் மணி. இதுக்குறித்து மணி ஒரு பதிவையும் வெளியிட்டிருந்தார்.
அதில் “ஒரு வேளை உண்மையிலேயே வளந்துட்டோமோ, வாட்சாப் வில்லங்க காலாம். ரசிகையோட பேசினேனாம். அந்த எடிட்டர்தான் வந்து விளக்கு பிடித்தான் போல.. ஸ்னாப்க்கும் வாட்ஸாப்க்குமே அவனுக்கு வித்தியாசம் தெரியல.
கேஸ் போட வாய்ப்பு:
அவன் கற்பனையை எல்லாம் எழுதி வச்சிருக்கான். என்கிட்ட பொண்ணுங்க பேசுறதுதான உங்களுக்கு பிரச்சனை. இப்ப என்கிட்ட எந்த பொண்ணு பேசக்கூடாது அவ்ளோதான. ஏன்னா நான் கருப்பா அசிங்கமா இருக்கேன் மத்தவங்க வெள்ளையா அழகா இருக்காங்க. மத்தவங்க வீடியோ போடுறது உங்களுக்கு ப்ராபளம் இல்ல.
அடுத்து ஏதாவது ஒரு பொண்ண ரெடி பண்ணி என் மேல கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணுவீங்க. அவ்வளவு பெரிய சேனலா இருந்து இப்படி ஈனத்தனமா இருக்கீங்களே” என பதிவிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றில் பேசும்போது “நியூஸ் சேனல் கூறுவதை நம்ப வேண்டாம். இந்த சம்பவங்களுக்கு பின்னால் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது. அது என்னை கைது செய்ய கூட வாய்ப்பிருக்கிறது” என திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் மணி.