இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களின் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. கடந்த மூன்று தலைமுறைகளாக இந்தியாவில் தொடர்ந்து தொழில் செய்து வரும் இவர்கள் தொழில் மட்டுமன்றி பல உதவிகளையும் செய்து இருக்கின்றனர்.
தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்தில் வரும் லாபத்தில் ஒரு பகுதியை மக்களுக்கு உதவி செய்வதற்காகவே ஒதுக்கியவர் ரத்தன் டாடா அதனால்தான் அம்பானி குடும்பத்திற்கு இல்லாத மரியாதை ரத்தன் டாடாவிற்கு இந்தியாவில் உண்டு.
29 வயது நெருங்கிய நண்பர்
கொரோனா சமயத்தில் கூட அரசுக்கு 1500 கோடியை அசால்ட்டாக எடுத்து நிதியாக கொடுத்தவர். இப்படிப்பட்ட பெரிய தொழிலதிபராண ரத்தன் டாடாவின் நண்பர் யார் என்று கேட்டால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும்.
86 வயதை அடைந்த ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பர் சாந்தனு என்கிற 29 வயது இளைஞன் என்று கூறப்படுகிறது. டாடாவுக்கு புத்தகம் வாசிப்பதில் துவங்கி வணிகம் சார்ந்த விஷயங்களை பார்த்துக் கொள்வது வரை அனைத்தையும் செய்து வருகிறார் சாந்தனு.
யார் அந்த இளைஞர்
இதனாலேயே அவர்களுக்குள் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. ஒரு ஊழியர் என்பதையும் தாண்டி எப்பொழுதும் ரத்தன் டாடா பல கருத்துக்களை சாந்தனுவுடன்தான் பகிர்ந்து கொள்வாராம். பிறகு நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் துவங்கப்பட்ட பொழுது அதில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை தொடர்ந்து அவர் சாந்தனுவிடம்தான் பெற்று வந்துள்ளார்.
இவ்வளவு சின்ன இளைஞனிடம் போய் தன்னுடைய தொழில் சார்ந்த விஷயங்களுக்கு இவ்வளவு அனுபவம் வாய்ந்த ரத்தன் டாடா எதற்கு ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.
கேட்டா அசந்து போயிடுவீங்க
ஆனால் சாந்தனு ஒரு சாதாரண இளைஞன் மட்டும் கிடையாது அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்தவர் அதனால் அவருக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்த பல விஷயங்களும் தெரியும்.
மேலும் இப்போதைய தலைமுறையினர் மத்தியில் எது பிரபலமாக இருக்கிறது என்பது ரத்தன் டாடாவை விட சாந்தனுவுக்குதான் நன்றாக தெரியும் அதனாலேயே புது தொழில்களில் முதலீடு செய்வதற்கு சாந்தனுவை நம்பி இருந்திருக்கிறார் ரத்தன் தாத்தா.
திரைப்படங்களில் தான் முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே நட்பு உண்டாவது போன்ற காட்சிகளை பார்க்க முடியும். ஆனால் ரத்தன் டாடாவிற்கு நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.