ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் அதிபர் ரத்தன் டாட்டாவின் மறுபக்கம் பற்றி நேர்த்தியான முறையில் செய்யாறு பாலு பேசிய விஷயங்கள் பல ரசிகர்களின் மனதில் ஆழமாக இந்தியன் என்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்தது.

எவ்வளவு தான் சொத்து இருந்தாலும் மனித நேயத்தோடு வாழ்ந்து வந்த ரத்தன் டாட்டா, டாட்டா சுமோ வண்டியை எப்படி தயாரித்தார் என்பது குறித்த விரிவான விளக்கத்தையும் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது பற்றி இந்த பதிவில் படிக்கத் தெரிந்து கொள்ளலாம்.

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ..

பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கும் நிறுவனங்களுக்கும் சொந்தக்காரராக இருக்கக்கூடிய ரத்தன் டாடா சாமானிய மக்களும் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு வாழ்ந்து வந்தவர். இந்த பழக்கம் இவரை விட்டு கடைசி வரை விலகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் குறைந்த விலையில் நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். அது போல இந்தியர்கள் தொழில் துறையில் வல்லவர்களாக வர முடியாது என்று கருதிய ஆங்கிலத்திற்கு அவரது கொள்ளு தாத்தா தக்க பாடத்தை புகட்டி இருக்கிறார்.

இந்தியாவில் அப்போது தான் ரயில்வே தண்டவாளங்களை நிறுவி வந்த வேளையில் டாட்டா குடும்பத்தில் ஸ்டீல் பிசினஸை ஆரம்பித்ததை அடுத்து அந்த பணியில் டாட்டா குழுமத்தை இணைத்துக் கொள்ள அவரது தாத்தா விரும்பியதை அடுத்து ஆங்கிலேயரிடம் சென்று அது பற்றி சொல்ல அதற்கு நீங்கள் செய்யக்கூடிய பொருட்கள் தரமாக இருக்காது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீங்கள் சாப்பிட்டது போக மீதி தான் இருக்கும் என நக்கலாக கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

இதைக் கேட்டு நொந்து போன அவரது கொள்ளு தாத்தா இவர்களோடு தொழில் செய்ய வேண்டாம் என்று வந்துவிட்டார். பின்னாளில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தில் இருந்த ரயில் தண்டவாளங்கள் எளிதாக தகர்த்து எறியப்பட்ட பிறகு இவரிடம் ரயில்வே தண்டவாளங்களை செய்து தர முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள்.

எதற்கு நிச்சயமாக செய்து தருகிறோம் நாங்கள் தின்றது போக மீதி இருந்தால் என்று தக்க பதிலடி தந்திருக்கிறார்கள்.

அந்த மரபில் வந்த ரத்தன் டாடா ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு வகைகளில் அவர்களுக்கு உதவிகளை செய்திருக்கிறார்.

எல்லோரிடமும் அன்பாகவும் பண்புடனும் நடந்து கொள்ளக் கூடிய ரத்தன் டாடா எந்த இடத்திலும் தன்னை செல்வாக்கு மிக்கவராக வெளிப்படுத்திக் கொண்டதில்லை. சாமானிய மக்களோடு மக்களாய் இணைந்து பழகிய பிறகு தான் டாடா சுமோ வண்டியை வடிவமைத்தார்.

டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

அந்த வண்டியை வடிவமைத்த சுமன் இன்ஜினியர் பெயரைத் தான் சுமோ என்று மாற்றி அந்த வண்டியின் பெயராக வைத்து அவரை பெருமைப்படுத்திய நல்ல உள்ளம் கொண்டவர்.

சுமார் 3800 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தாலும் எளிமையை விரும்பக்கூடிய இவர் ஏழைகளின் துயர் துடைக்க எண்ணற்ற வழிகளில் பல்வேறு வகையான உதவிகளை செய்தவர்.

தனது நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் நலனை தன் நலனை விட மேலாக கருதியதோடு அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு பக்க பலமாக இருந்தவர்.

இதை அடுத்து அவரது இறப்புக்குப் பிறகு அவருடைய நல்ல பழக்கங்கள் பற்றி அதிக அளவு ஊடகங்களில் தகவல்கள் பரவி வருவதோடு ரத்தன் டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மைகள் குறித்து இந்திய இளைஞர்கள் அனைவரும் தற்போது பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version