கணவன் மனைவியோ..? – காதலன் காதலியோ..? – இதை பண்ணா ரொம்ப தப்பு..! – போட்டு உடைத்த ராதிகா ஆப்தே..!

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே.

இதனை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

தொடர்ந்து சமூகம் மற்றும் சினிமா குறித்த கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்து வரும் இவர் தற்போது சமூகம் சார்ந்த ஒரு கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் பேசியதாவது தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, நானும் எனது கணவரும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரியான வேலைகளை செய்து கொண்டு அவரவர் உலகத்தில் சுதந்திரமான ஒரு அற்புதமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேல் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், கணவன் மனைவியோ..? அல்லது காதலன் காதலியோ..? இருவருக்கும் இடையே ஏதாவது ஒரு சண்டை.. ஏதாவது ஒரு சச்சரவு ஏற்படுமாயின்.. மூன்றாவதாக ஒரு நபரின் ஆலோசனையை உள்ளே வர அனுமதிக்கக்கூடாது.

அது காதலுக்கும் ஆபத்தானது. இல்லற வாழ்க்கைக்கும் மிகவும் ஆபத்தானது. மூன்றாம் மனிதரை இருவரின் பிரச்சனையில் நுழைய விட்டால் அந்த உறவு விரிசல் அதிகமாகி விட்டது என்பது பொருள்.

உதாரணமாக, வலுவாக இருக்கும் பாறைக்கு நடுவே மூன்றாவதாக ஒரு உளியை சொருகினால் எப்படி அது இரண்டாக பிளந்து, சுக்கு நூறாக உடைந்து விடுமோ.., அதுபோல இருவர் உறவுக்குள் மூன்றாவதாக ஒரு நபரை உளி போல உள்ளே அனுமதித்தால் அந்த உளி வலுவான உறவை உடைத்துவிடும்.

எனவே மூன்றாவது நபர் ஒருவர் உள்ளே வர அனுமதிக்கவே கூடாது என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியிருக்கிறார். எனவே கணவன் மனைவியாக இருந்தாலும் காதலன் காதலியாக இருந்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும் சரி மூன்றாவதாக ஒரு நபரிடம் ஆலோசனை கேட்கக்கூடாது.

அவரை உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என்று நீங்கள் நம்பக்கூடாது என்று பதிவு செய்து இருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே. இதனை கேட்ட ரசிகர்கள், இது நிதர்சனமான உண்மை என்று வருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version