கூலி திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் பண்ணும் என்று வாயார வாழ்த்திய ரத்தினகுமாரை இணையதள வாசிகள் விலாசி எடுத்து இருக்கும் விவரம் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ் திரையுடப்பை பொறுத்த வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். அவர் படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கும் நிலையில் இன்னும் பைத்தியக்காரனாகவே எல்லோரையும் நினைத்துக்கொண்டு இருக்கீங்களா என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
கூலி படம் குறித்த கருத்து..
மற்றொரு பக்கமோ லோகேஷ் கனகராஜ் நண்பரும் மாஸ்டர், லியோ படங்களில் வசனத்தை எழுதி தெறிக்கவிட்ட ரத்னகுமார் கூலி படம் குறித்து போட்ட ட்விட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தலைவர் 121-வது படத்தில் லோகேஷோடு இணைந்து பணியாற்ற கூடிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் அந்தப் படம் வெற்றி படமாக மாற வேண்டும் என்று வாயார வாழ்த்தி ரத்தினகுமார் ட்விட் மூலம் போட்டிருக்கிறார்.
ஏற்கனவே லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய், காக்கா, கழுகு என சொல்லி பல்வேறு விமர்சனங்களை கிளப்பி விட்ட இணையதள வாசிகள் இன்னும் அதை மறக்காத சூழ்நிலையில் எவ்வளவு உயர பறந்தாலும் பசிச்சா தான் கீழ வந்தே ஆகணும் என ரத்தினகுமார் பேசியது ரஜினிகாந்தை டார்கெட் பண்ணி தான் என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ரத்தினகுமாரை வெளுத்து வாங்கி விட்டார்கள்.
ரத்தினகுமாரை விலாசும் இணையவாசிகள்..
இந்நிலையில் இயக்குனர் ரத்தினகுமார் மேயாத மான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எங்க வீட்டு குத்துவிளக்கு என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தை அடுத்து அமலாபால் ஆடை இன்றி போல்டாக நடித்த ஆடை படத்தை இவர் தான் இயக்கினார்.
இதனை அடுத்து இவர் இயக்கிய குலு குலு படம் தோல்வியை தந்தது. இந்தப் படத்தில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் லியோ படத்தில் லோகேஷ் உடன் இணைந்து பயணித்த ரத்தினகுமாரை அப்டேட் அசுரன் என ரசிகர்கள் அழைத்தார்கள்.
இதை அடுத்து லியோ படத்தில் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களை அலறவிட்ட ரத்தினகுமார் தலைவர் 121 வது படத்தில் இவர் பணியாற்றக் கூடாது என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சொன்னதைப் போலவே பணியாற்றாமல் அடுத்த படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதெல்லாம் ஒரு பொழப்பா..
ரத்தினகுமார் வீட்டில் சூப்பர் ஸ்டார் படத்துக்கு சூப்பராக டைட்டிலில் கூலி கருப்பு மற்றும் தங்க நிறத்தை ரஜினிக்கு பயன்படுத்திய விதம் அனிருத் மியூசிக் டிஸ்கோ பாடல் என ஆரம்பமே அலப்பறையாக அதிர்கிறது.
எனவே இந்தப் படம் நான்கு டிஜிட் அளவு வசூலை பெற்றுத் தரும். முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற பழமொழியையும் ஷேர் செய்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் தனக்கு பதிலாக பணியாற்றிய வசனகர்த்தாவான சந்துரு அன்பழகனையும் டேக் செய்து ரொம்ப சந்தோசம் என பதிவிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதால் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.