உடை மாற்றும் காட்சியை வெளியிட்ட பிக்பாஸ் ரவீனா தாஹா..! தீயாய் பரவும் வீடியோ..!

பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் மாதிரியான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றவர் நடிகை ரவீனா தாஹா. மிக இளம் வயதிலேயே ரவீனாவிற்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்துவிட்டது. அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் அவர் சினிமாவில் வருவதற்கு ஊக்குவித்ததன் காரணமாக முதலில் சின்ன துறையில் அறிமுகமானார் ரவீனா.

 2009இல் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரவீனா. அதற்குப் பிறகு  சில வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளியான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக பங்கேற்றார் ரவீனா.

சிறு வயது முதலே ஆர்வம்:

ரவீனா சிறப்பாக நடனமாட கூடியவராவார். அதனால் அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி கவனத்தை ஈர்த்தார் ரவீனா. அதன் மூலமாக அவருக்கு ஜீ தமிழில் மட்டுமின்றி விஜய் டிவியிலும் வரவேற்பு கிடைக்க துவங்கியது தொடர்ந்து ஜீ தமிழில் வரவேற்பை பெற்று பூவே பூச்சூடவா என்னும் சீரியலில் துர்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் ரவீனா.

இதற்கு நடுவே அவருக்கு ராட்சசன் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மற்ற திரைப்படங்களை விடவும் ராட்சசன் திரைப்படத்தில் ஒரு அடையாளமான கதாபாத்திரமாக அவரது கதாபாத்திரம் இருந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து எனிமி, டீமன், பீசா 3  மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரவீனா.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை சூப்பர் சிங்கர் சீசன் 9, குக் வித் கோமாளி சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கிறார்.

பிக்பாஸில் பிரபலம்:

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டதன் மூலம் அதிகமாக வரவேற்பை பெற்றார் ரவீனா. கிட்டத்தட்ட 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்புகள் கிடைக்க துவங்கின.

ரவினாவை பற்றி தெரியாதவர்களுக்கு கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை தெரிய தொடங்கியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தற்சமயம் அதிக பாலோவர்ஸ் கொண்ட ஒரு பிரபலமாக ரவீனா இருந்து வருகிறார்.

இந்த பாலவர்சை தக்க வைத்துக் கொள்வதற்கும் இன்னும் அதிகமான நபர்களிடம் வரவேற்பை பெறுவதற்கும் தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ரவீனா. சமீபத்தில் இப்படி உடைமாற்றி மேக்கப் செய்யும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ அதிக பிரபலம் ஆகி வருகிறது. முகத்திற்கு மட்டும் இவ்வளவு மேக்கப்பா என்று பலரும் அதிர்ச்சி அடையும் வகையில் மேக்கப் செய்து வீடியோ போட்டு இருக்கிறார் ரவீனா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version