இன்று இருக்கும் பேச்சுலர்கள் அனைவருமே நாக்கு ருசிக்காக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் நாக்குக்கு ருசியாக விரைவில் செய்யக்கூடிய ரெசிபி தான் இந்த மாங்காய் சாதம்.
பார்த்ததுமே நாக்கு எச்சில் ஊறக்கூடிய எந்த மாங்காய் சாதத்தை மாங்காய் சீசனை செய்து சாப்பிடும் போது இதன் சுவை மிகவும் அலாதியாக இருக்கும்.
கர்ப்பிணிகள் விரும்பி உண்ணக்கூடிய இந்த மாங்காய் சாதம் அவர்களின் மசக்கை வாந்தியை தடுத்து நிறுத்தும். எனவே அவர்களுக்கு இந்த சாதத்தை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து கொடுக்கலாம்.
மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
1.சாதம் ஒரு கப்
2.சின்ன வெங்காயம் பொடி பொடியாய் நறுக்கியது
3.பச்சை மிளகாய் 4
4.துருவிய மாங்காய் ஒன்று
5.கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்
6.உளுத்தம் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
7.கருவேப்பிலை
8.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
9.25 மில்லி எண்ணெய்
10.தேவையான அளவு உப்பு
11.ஒரு சிட்டிகை சர்க்கரை
செய்முறை
முதலில் அடுப்பில் வாணலியை வைத்து 25 மில்லி அளவு எண்ணெயை விட்டு சூடாக்கவும் .எண்ணெய் சூடானதும் தாளிக்க தேவையான கடுகு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒன்றாக போடவும்.
கடுகு நன்கு வெடித்த உடன் அதை கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் போட்டு வெடிக்க விடவும். இதனை அடுத்து கப்பில் இருக்கும் சாதத்தை அப்படியே கொட்டி நன்கு கிளறுங்கள்.
சாதம் உதிர் உதிராக வரக்கூடிய பக்குவத்தில் துருவி வைத்திருக்கும் மாங்காய் துருவலை போட்டு கிளரவும். இதனை அடுத்து ஒரு சிட்டிகை சர்க்கரையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறி விடவும்.
கடைசியாக தேவையான உப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது சூடான சுவையான பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடிய மாங்காய் சாதம் ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் எந்த மாங்காய் சாதத்தை செய்து பார்த்து எப்படி உள்ளது என்பதை எங்களிடம் பகிருங்கள்.