வாய்ப்புக்காக படுக்கையை பகிர ரெடி.. ஆனால்.. ஒரே ஒரு கண்டிஷன்.. பொழந்து கட்டும் சீரியல் நடிகை..!

சினிமா துறையை பொருத்தவரை நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை என்பது பரவலாக இருந்து வருகிறது .

இதில் பல நடிகைகள் அவதிப்பட்டு டார்ச்சர் அனுபவித்து வந்ததாக பொதுவெளியில் வந்து வெளிப்படையாகவே பல பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார்கள் .

திரைத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட்:

ஆனால், ஒரு சிலர் அந்த அனுபவமே எனக்கு கிடையாது. ஆனால் மற்ற நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் குறித்து பேசியது எங்களுக்கு தெரியும் என சாக்குபோக்கு சொல்லி எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

சில நடிகைகள் தொடர்ந்து படவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லையை மறைத்து அப்படி ஒரு அனுபவமே என ஏற்பட்டதில்லை என அபாண்டமாக பொய் சொல்லி விடுகிறார்கள் .

இப்படியாக சினிமாவில் நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்கிறது .

சீரியல் நடிகை பாப்ரி கோஷ்:

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையான பாப்ரி கோஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த கேள்விக்கு மிகவும் போல்டாக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பதிலை அளித்து அதிர வைத்து இருக்கிறார்.

முதன்முதலில் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்காளி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பாப்பிரகாஷ்.

தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், ஒய், பைரவா, சக்கை போடும் போடு ராஜா, சர்க்கார் , விஸ்வாசம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் இவர் நடித்திருக்கிறார்.

இதனிடையே இவர் சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தொடர் ஹிட் சீரியல்கள்:

கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்ட நாயகி தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அதன் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பிறகு பாண்டவர் இல்லம் தொடரில் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றார். ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தமிழ் சினிமா மக்களுக்கு பிரபலம் ஆனார்.

நடிகை பாப்ரிகோஷ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இதுவரை பெங்காலி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நல்ல அழகு, லட்சணமான தோற்றம், பப்லியான உடல் என ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்த சீரியல் நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

படவாய்ப்பிற்காக படுக்கை பகிர ரெடி:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை அனுபவித்திருக்கிறீர்களா அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்டதற்கு… அதிரடியான பதில் கூறியுள்ளார்.

அதாவது, என்னிடம் யாரேனும் வந்து அட்ஜஸ்ட்மென்ட் பண்ணா தான் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் அப்போதுதான் பட வாய்ப்பு கொடுப்பேன் என்று சொன்னால் அவரிடம் நான் ஒன்றுமே சொல்ல மாட்டேன்.

அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட அந்த நபரை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்க்கே சென்று அவருடைய குடும்பத்தார் முன்பு கட்டி அணைத்து முத்தம் கொடுப்பேன் .

இப்படிதான் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணனும்:

அப்போது அவர் வீட்டில் இருக்கும் எல்லோரும் ஏன் இப்படி பண்ற? என்று என்னை அதட்டி கேட்பார்கள். அப்போது நான்….இவர் தான் உனக்கு பட வாய்ப்பு தரேன். ஆனால், என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள வேண்டும் என சொன்னார் என கூறி விடுவேன்.

அதன் பிறகு அந்த நபரை அவருடைய குடும்பத்தார் பார்த்துக் கொள்வார்கள். அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இப்படி எதிர்கொண்டால் அடுத்தது யாரும் உங்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு வரவே மாட்டார்கள்.

வரவும் பயப்படுவார்கள் என பாப்ரிகோஷ் மிகவும் தைரியமாக டிப்ஸ் ஒன்றைக் கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version