பிரபல காமெடி நடிகை சோபனா குறித்து பலரும் அறிந்திருப்பீர்கள். மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற காமெடி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகை சோபனா.
மட்டுமில்லாமல் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, நடிகர் வடிவேலு போன்ற நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் ஷோபனா.
இவருடைய அம்மா வைரம் ராணி, அப்பா ஜெயராமன் இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார். இவருடைய அம்மாவும் நாடகம் மற்றும் சில படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
இவருடைய அப்பாவும் நாடக நடிகர் தான். அக்கா ஆனந்தி அவர்கள் இயக்குனர் குருசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இவர்களுடைய மொத்த குடும்பமே ஒரு சினிமா குடும்பம் தான்.
நடிகை சோபனா தன்னுடைய 15 வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் காமெடி நடிகைகள் என்றால் அது வெகு சிலர் தான். நடிகைகள் ஆச்சி மனோரமா.. நடிகை கோவை சரளா.. உள்ளிட்ட நடிகைகளின் வரிசையில் நடிகை சோபனாவும் இடம் பெற்று இருந்தார்.
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. மெல்ல மெல்ல இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் திடீரென தவறான முடிவை எடுத்துக்கொண்டார்.
இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவருடைய இந்த தவறான முடிவுக்கு காரணம் என்ன..? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இவருடைய தாய் கூறியதாவது, இவர் ஒருவரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார். ஆனால், அவர் இவளை ஏமாற்றி விட்டதாகவும்.. இதனால் திருமணத்தின் மீது வெறுப்பாகி திருமணமே செய்து கொள்ளாமல் இருந்ததாகவும் கூறி இருக்கிறார்.
மட்டுமில்லாமல் அவ்வப்போது உடல்நலம் சரியில்லாமல் போவது.. மஞ்சள் காமாலை.. சுவாச பிரச்சனைகள்.. என மாறி மாறி நோய்வாய் பட்டுக் கொண்டிருந்த நடிகை சோபனா உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.. ஒரே சமயத்தில் உடல் ரீதியாகவும்.. மனரீதியாகவும் துவண்டு போயிருந்த சோபனா-வை நாங்கள் பத்திரமாக தான் பார்த்துக் கொண்டு வந்தோம்.
ஆனால் திடீரென எப்படி ஒரு முடிவை எடுத்து விட்டார் என கூறியிருக்கிறார் அவருடைய தாயார்.
ஆனால், சமீபத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் சோபனா இறந்தது எப்படி..? என்று ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
அதாவது நடிகை சோபனா தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒருவரை காதலித்து வந்தார்.
ஆனால் அவர் ஏமாற்றி விட்டார். இதனால் மணமுடைந்து போன சோபனா தவறான முடிவு எடுத்துக் கொண்டார் என்று கூறியிருக்கிறார். அவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.